கோலாகலமாக துவங்கியுள்ள 2023 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 191/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பனுக்கா ராஜபக்சா 50 (32), சிகர் தவன் 40 (29), சாம் கரண் 26* (17) என என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதை தொடர்ந்து 192 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு மந்தீப் சிங் 2, அங்குள் ராய் 4, ரஹ்மத்துல்லா குர்பாஸ் 22 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 29/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா அதிரடியாக 24 (17) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த இளம் வீரர் ரிங்கு சிங் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.;
ரசிகர்கள் அதிருப்தி:
இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் ரசல் முரட்டுத்தனமாக 3 சிக்சரையும் 2 பவுண்டரியையும் பறக்க விட்டாலும் 35 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் இம்பேக்ட் வீரராக விளையாடிய வெங்கடேஷ் ஐயரும் 34 (28) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் ஷார்துல் தாகூர் 8* (3) சுனில் நரேன் 7* (2) ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில் 16 ஓவரில் கொல்கத்தா 146/7 என்ற ஸ்கோருளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வந்த மழை போட்டியை தடுத்து நிறுத்தியது.
சுமார் ஒரு மணி நேரமாக மழை நிற்காமல் கொட்டி தீர்த்த போது டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் முன்னிலையில் இருந்தது. அதன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே வென்று இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்து முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்த போட்டியில் முதலில் பஞ்சாப் பேட்டிங் செய்த பின் மொகாலி மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த ராட்சத மின் விளக்குகள் திடீரென்று அணைந்தன.
அதன் காரணமாக 5.15 மணிக்கு துவங்க வேண்டிய 2வது இன்னிங்ஸ் சுமார் அரை மணி நேரம் தாமதமாக துவங்கியது இறுதியில் கொல்கத்தாவில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் போட்டி சரியான நேரத்தில் துவங்கியிருந்தால் நிச்சயமாக கொல்கத்தா கடைசியில் எதிர்கொள்ள வேண்டிய 4 ஓவர்களை மழை வருவதற்கு முன்பே எதிர்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுனில் நரேன், ஷார்துல் தாகூர் போன்ற பவுலிங் ஆல் ரவுண்டர்கள் களத்தில் இருந்ததற்கு கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கலாம்.
மொத்தத்தில் வெற்றி – தோல்வி என்பதை தாண்டி சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக நடைபெறும் ஐபிஎல் தொடரில் மின்விளக்குகள் பிரச்சனையால் போட்டியின் முடிவு 100% சமமாக அமையாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருந்த பஞ்சாப் மாநில வாரியம் நிர்வாகிக்கும் பிசிஏ கிரிக்கெட் மைதானத்தை ஏராளமான ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: நான் டபுள் மடங்கு தரேன், இந்திய ரசிகர்களுக்கு பதிலடியாக பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுத்த ஆண்டர்சன் – நடந்தது என்ன
இதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா தன்னுடைய 2வது போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள காத்திருக்கிறது. அதற்கு முன்பாக ஏப்ரல் 5ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராக தன்னுடைய 2வது போட்டியில் பஞ்சாப் விளையாட தயாராக உள்ளது.