பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 2019 வாக்கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஒருநாள் மற்றும் டி20 ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார். அதனால் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட அவர் தொடர்ச்சியாக நல்ல ரன்களை எடுத்தாலும் அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக உங்களுடைய ஓப்பனிங் இடத்தை அணியின் நலன் கருதி இளம் வீரர்களுக்கு கொடுத்து மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அக்ரம், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை ஏற்காத அவர் தொடர்ந்து ஓப்பனிங் இடத்தில் விளையாடி வரும் நிலையில் சமீபத்திய 2023 பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் 80 ரன்களை தொட்டதும் மெதுவாக விளையாடி சதமடித்தார். ஆனால் இறுதியில் அது அவர் தலைமை தாங்கிய பெஷாவர் அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது.
ஆண்டர்சன் ஆதரவு:
அதனால் சதத்துக்கு விளையாடாமல் அணியின் நலனுக்காக விளையாடுங்கள் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் வெளிப்படையாக விமர்சித்தது உலக அளவில் வைரலானது. அந்த நிலையில் இங்கிலாந்தின் பிரபல 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடருக்காக டிராப்ட் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் அதிக தொகைக்கு விலை போவார் என்று 25 சதவீதத்தினர் வாக்களித்து தேர்வு செய்தனர்.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டிராப்ட் ஏலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த எந்த அணிகளும் 100000 யூரோ அடிப்படை விலையில் பங்கேற்ற அவரை வாங்காதது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அதே போல் மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்மானும் விலை போகாத நிலையில் ஷாஹின் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர். அதன் காரணமாக தடவலாக செயல்படும் திறமையை உணர்ந்த காரணத்தாலேயே பாபர் அசாமை யாரும் வாங்கவில்லை என்று நிறைய ரசிகர்கள் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.
குறிப்பாக விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் நம்பர் ஒன் என்று தொடர்ந்து விமர்சித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாபர் அசாமை இந்திய ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார்கள். இந்நிலையில் பாபர் அசாம் போன்ற தரமான வீரரை இங்கிலாந்தை சேர்ந்த அணிகள் வாங்காதது ஏன் என்று தெரியவில்லை என அந்நாட்டு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தாம் ஒரு அணியின் உரிமையாளராக இருந்தால் இரு மடங்கு பணத்தை அல்லது மொத்த பட்ஜெட்டையும் அவருக்காக செலவழித்து வாங்குவேன் என்று தெரிவிக்கும் ஆண்டர்சன் இது பற்றிய விமர்சனங்களுக்கு குறிப்பாக இந்திய ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க:IPL 2023 : விராட் கோலி மாதிரி கலக்குறாரு, இவர் இப்டி அதிரடியா ஆடுவாருன்னு எதிர்பாக்கல – சேவாக் மகிழ்ச்சி பேட்டி
“பாபர் அசாமுக்காக நான் இரு மடங்கு பணம் செலுத்துவேன். சொல்லப்போனால் என்னுடைய மொத்த பட்ஜெட்டையும் நான் அவருக்காக கொடுப்பேன். சர்வதேச போட்டியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் இந்த தொடரில் அவர் பங்கேற்பதற்கு போதிய நேரம் கிடைக்காத காரணத்தாலேயே எந்த அணியும் வாங்கவில்லை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக ஹண்ட்ரட் தொடரில் முழுமையாக விளையாட முடியாத காரணத்தால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.



