IPL 2023 : விராட் கோலி மாதிரி கலக்குறாரு, இவர் இப்டி அதிரடியா ஆடுவாருன்னு எதிர்பாக்கல – சேவாக் மகிழ்ச்சி பேட்டி

Kohli-1 Sehwag
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்கடித்த ஹர்டிக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் தங்களது வெற்றி நடையை ஆரம்பத்திலேயே துவங்கியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு டேவோன் கான்வே 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய இளம் நம்பிக்கை நட்சத்திரம் ருத்ராஜ் கைக்வாட் 4 பவுண்டரி 9 சிக்சருடன் 92 (50) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் சதத்தை நழுவ விட்டு ஆட்டமிழந்தார்.

Ruturaj gaikwad 73

- Advertisement -

ஆனால் அவருக்கு பின் ராயுடு 12, பென் ஸ்டோக்ஸ் 7, ரவீந்திர ஜடேஜா 1, சிவம் துபே 19 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் குஜராத்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கேப்டன் தோனி 14* (7) ரன்களை விளாசி ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்த போதிலும் 10 ஓவரில் 100+ ரன்களை எடுத்திருந்த சென்னை இறுதியில் 20 ஓவரில் 178/7 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அதை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 63 (36), சாய் சுதர்சன் 22 (17), விஜய் சங்கர் 27 (21) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுத்து எளிதான வெற்றி பெற வைத்தனர்.

சேவாக் பாராட்டு:
முன்னதாக 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கைக்வாட் இதற்கு முன் விளையாடிய 3 ஐபிஎல் தொடர்களிலும் தன்னுடைய முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார். ஆனால் இம்முறை முதல் போட்டியிலேயே பெரிய ரன்களை குவித்துள்ள அவர் இந்த தொடரில் ஆரம்பத்திலேயே நல்ல ஃபார்மில் இருப்பது சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

Ruturaj Gaikwad CSk

அதை விட பொதுவாகவே சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் சிக்ஸர்களை விட அதிக பவுண்டரிகளை அடிக்கும் வீரராக அறியப்படுபம் அவர் இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக 4 பவுண்டரியும் 9 சிக்சர்களையும் விளாசி கொஞ்சம் கூட தடுமாறாத பேட்டிங்கை வெளிப்படுத்தியது அனைவரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் விராட் கோலி விளையாடும் போது தான் இவ்வாறு பாராட்டுவதாக தெரிவிக்க முன்னாள் வீரேந்திர சேவாக் இதர சென்னை வீரர்கள் தினறிய போது ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக விளையாடியதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை அடித்ததை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் நோ-பால் போன்ற பந்தில் ருதுராஜ் அவுட்டாகி சதத்தை தவற விட்டது ஏமாற்றத்தைக் கொடுப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற வார்த்தைகளை நாண் எப்போதும் விராட் கோலியை பாராட்டுவதற்கு தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று அவர் பேட்டிங் செய்த விதம் என்னுடைய கண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. அந்தளவுக்கு அவர் சிறப்பான விதத்தில் விளையாடினார்”

virender sehwag

“ஏனெனில் சென்னை அணியில் இருந்த இதர பேட்ஸ்மேன்கள் பந்தை சரியாக அடிக்காமல் ஆரம்பத்திலேயே அவுட்டானார்கள். ஆனால் அவர் மட்டும் தொடர்ந்து வலுவான ஷாட்டுகளை அடித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் பவுண்டரிகளை விட அதிக சிக்சர்களை அடித்தார். ஆனால் அவர் பொதுவாகவே அதிக சிக்ஸர்கள் அடிப்பதற்கு பெயர் போனவர் கிடையாது. ஆம் சயீத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் தொடரின் ஒரே ஓவரில் அவர் 7 சிக்ஸர்கள் அடித்தது எனக்கு தெரியும்”

இதையும் படிங்க:IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகல். அடப்பாவமே நம்ம வில்லியம்சனுக்கு இப்படியா ஆகனும்? – என்ன நடந்தது?

“அந்த உலக சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று நினைக்கிறேன். அதே போல இந்த இன்னிங்ஸ் மிகச் சிறப்பாக இருந்தது. இருப்பினும் அவர் சதமடிக்காமல் அவுட்டானது அவருக்கும் எனக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது. இடுப்பளவு உயரத்தில் வந்த அந்த பந்து சர்ச்சைக்குரியது. இருப்பினும் நடுவரின் தீர்ப்பை நாம் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறினார்.

Advertisement