IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகல். அடப்பாவமே நம்ம வில்லியம்சனுக்கு இப்படியா ஆகனும்? – என்ன நடந்தது?

Kane-Williamson
- Advertisement -

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கிய ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த முதலாவது போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தோனி தலைமையிலான சென்னை அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டும் இன்றி இதுவரை ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

Tewatia

- Advertisement -

அதன்படி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த முதலாவது போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் குவித்தார்.

அதனை தொடர்ந்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.2 ஓவர்களின் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். குஜராத் அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது அந்த அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Williamson

அதன்படி கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அவரை குஜராத் அணி 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக குஜராத் அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் இவர்தான் என்று உறுதியாகி இருந்தது. அதன்படியே நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் பிளேயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த போட்டியின் போது துரதிஷ்டவசமாக 13-வது ஓவரில் ருதுராஜ் அடித்த பந்தை பவுண்டரி லைனிலிருந்து தடுக்க முயற்சித்த வில்லியம்சன் பந்தை தாவி பிடித்து நினைத்து தவறுதலாக தனது கால் முட்டியினை தரையில் படும்படி விழுந்தார்.

- Advertisement -

அப்படி விழுந்ததுமே அவரால் எழுந்து நிற்க கூட முடியாமல் வலியில் துடித்தார். இதன் காரணமாக பவுண்டரி லைனின் அருகே வந்த அணியின் மருத்துவ உதவியாளர்கள் அவரை சோதித்த பிறகு அவரால் நடக்க முடியவில்லை என்று தெரிந்ததும் தூக்கிய படி மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சில முடிவுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வில்லியம்சன் காலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என்பதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : அரிதாக அடி வாங்கிய சுனில் நரேன், பார்முக்கு திரும்பிய வருண் சக்ரவர்த்தி – அதிரடி காட்டிய பஞ்சாப் ஸ்கோர் இதோ

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நம்ப தகுந்த வட்டாரங்களில் பேசப்படும் விடயமாக வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது உறுதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே அவர் காயத்தை சந்தித்து வெளியேற இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement