அரிதாக அடி வாங்கிய சுனில் நரேன், பார்முக்கு திரும்பிய வருண் சக்ரவர்த்தி – அதிரடி காட்டிய பஞ்சாப் ஸ்கோர் இதோ

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ள ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை நடப்புச் சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தோற்கடித்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 23 (12) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய இலங்கையின் நட்சத்திர வீரர் ராஜபக்சாவுடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதில் சற்று அதிரடியாக விளையாடிய பானுக்கா ராஜபக்சா கொல்கத்தா பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் 3வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 11வது ஓவர் வரை கொல்கத்தாவை சிறப்பாக எதிர்கொண்டு 2வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அடி வாங்கிய நரேன்:
அதில் 5 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட ராஜபக்சா அரை சதம் கடந்து 50 (32) ரன்களில் உமேஷ் யாதவிடம் ஆட்டமிழந்தார். குறிப்பாக 5.99 என்ற மிகவும் குறைவான எக்கானமியில் டி20 கிரிக்கெட்டில் காட்டுத்தனமான பேட்ஸ்மேன்களால் கூட அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட சுனில் நரேன் வீசிய 5வது ஓவரில் 4, 4, 6 என பவர் பிளே ஓவரை பயன்படுத்தி அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் ரசிகர்களையும் வல்லுனர்களையும் ஆச்சரியப்படுத்தி ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து மறுபுறம் 6 பவுண்டரியுடன் நிதானத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சுழலில் 40 (29) ரன்களில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 1 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 21 (11) ரன்களும் சிக்கந்தர் ராசா 16 (13) ரன்களும் எடுத்து தங்களது வேலையை செய்து அவுட்டானார்கள். இறுதியில் சாம் கரண் 2 சிக்ஸருடன் 26* (17) ரன்களும் தமிழக வீரர் சாருக்கான் 2 பவுண்டரியுடன் 11* (7) ரன்களும் எடுத்தது நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 191/5 ரன்கள் எடுத்தது

- Advertisement -

மறுபுறம் சற்று சுமாராகவே பந்து வீசிய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 2 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக குறைவான ரன்களை கொடுத்து கட்டுக்கோப்புடன் துல்லியமாக பந்து வீசக்கூடிய சுனில் நரேன் இன்று ஆச்சரியப்படும் வகையில் 4 ஓவரில் 40 ரன்களை 10.00 என்ற எக்கனாமியில் வழங்கி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும் கடந்த வருடம் சுமாராக பந்து வீசி கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாக அமைந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்ட தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியில் 4 ஓவரில் 26 ரன்களை 6.50 என்ற எக்கனாமியில் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையும் படிங்க: IPL 2023 : முதல் போட்டியிலேயே காயமடைந்த தோனி – எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா? பிளெமிங் வெளியிட்ட அறிவிப்பு இதோ

சொல்லப்போனால் இதர கொல்கத்தா பவுலர்களை காட்டிலும் அவர் இந்த போட்டியில் குறைவான எக்கனாமியில் பந்து வீசி ஃபார்முக்கு திரும்பியுள்ளயது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இதை தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் கொல்கத்தா ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாமல் நிதிஷ் ராணா தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்புடன் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement