IPL 2023 : முதல் போட்டியிலேயே காயமடைந்த தோனி – எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா? பிளெமிங் வெளியிட்ட அறிவிப்பு இதோ

Stephen Fleming
- Advertisement -

2023 ஐபிஎல் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் தங்களது வெற்றி நடையை ஆரம்பத்திலேயே துவங்கியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 178/7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குறிப்பாக ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் எடுத்த போது 10 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்த அந்த அணியை ராயுடு 12, ஸ்டோக்ஸ் 7, ஜடேஜா 1, துபே 19 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கட்டுப்படுத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஷமி, அல்சாரி ஜோசப், ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 179 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 63 (36), ரித்திமான் சகா 25 (16), விஜய் சங்கர் 27 (21), சாய் சுதர்சன் 22 (17) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து கடைசி ஓவரில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள சென்னை லக்னோவுக்கு எதிராக நடைபெறும் தன்னுடைய 2வது போட்டியில் வென்று வெற்றி பாதையில் நடக்க போராட உள்ளது.

- Advertisement -

தோனியின் காயம்:
முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில் 315 நாட்கள் கழித்து நேற்று முதல் முறையாக களமிறங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அந்த நிலையில் 41 வயதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 14* (7) ரன்களை விளாசி தன்னைக் காண வந்த ரசிகர்களை ஏமாற்றமடைய வைக்காத தோனி 2வது இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்த போது கடைசி நேரத்தில் ராகுல் திவாடியா அடித்த பந்தை டைவ் அடித்து தடுக்க முயற்சித்த போது கடுமையான காயத்தை சந்தித்தார்.

குறிப்பாக முழங்காலில் பெரிய அடி வாங்கிய அவர் வலியால் துடித்த நிலையில் உடனடியாக மருத்துவ குழுவினர் வந்து சோதித்து முதலுதவி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து எஞ்சிய போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்து போட்டியின் முடிவில் தோல்விக்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார். இருப்பினும் காயத்தால் லேசாக தடுமாற்றமாகவே காணப்பட்ட அவர் குறைந்தது அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கிரிக்பஸ் போன்ற இணையதளங்களில் செய்திகள் வெளியானது சென்னை ரசிகர்களை கவலையடைய வைத்தது.

- Advertisement -

இந்நிலையில் வயது காரணமாக கடந்த ஒரு மாதமாகவே முழங்காலில் லேசான காயத்துடன் தோனி அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அதற்கு தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு எஞ்சிய தொடரில் அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். மேலும் 15 வருடத்திற்கு முன் இருந்த வயதும் வேகமும் தற்போது இருக்காது என்பதால் தோனி இப்படி லேசாக தடுமாறுவதில் தமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்று தெரிவிக்கும் பிளமிங் இப்போதும் அவர் சிறந்த கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியை கொடுப்பதாக கூறியுள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் எப்போதும் விளையாடுவார். இருப்பினும் இது போன்ற செய்திகள் எங்கிருந்து வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டார். ஆனால் இன்றைய போட்டியில் அது வெறும் தசைகளில் ஏற்பட்ட பிடிப்புகளால் வந்ததே தவிர முழங்கால் காயத்தால் அல்ல. மேலும் 15 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இனிமேலும் அவர் விரைவாகவும் வேகமானவராகவும் இருக்கப் போவதில்லை”

இதையும் படிங்க:IPL 2023 : நேற்று வந்த அணியிடம் திண்டாட்டம், சென்னைக்கு எதிராக 15 வருட மிரட்டல் சாதனையை சமன் செய்த குஜராத்

“ஆனால் இப்போதும் அவர் சிறந்த கேப்டனாக பேட்ஸ்மேனாக சென்னை அணியில் தன்னுடைய பங்கை வகிக்கப் போகிறார். அவர் தன்னுடைய வரம்புகளை அறிவார். களத்தில் அவர் மதிப்பு மிக்க வீரர். அவர் ஒரு லெஜெண்ட்” என்று பாராட்டினார்.

Advertisement