IPL 2023 : நேற்று வந்த அணியிடம் திண்டாட்டம், சென்னைக்கு எதிராக 15 வருட மிரட்டல் சாதனையை சமன் செய்த குஜராத்

GT vs CSK MS Dhoni
- Advertisement -

கோடை காலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வந்துள்ள ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக 4 பவுண்டரி 9 சிக்சருடன் 92 (50) ரன்கள் குவித்த போது 10 ஓவரில் 100க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.

Moeen Ali

- Advertisement -

ஆனால் அவரை அவுட்டாக்கி ராயுடு 12, பென் ஸ்டோக்ஸ் 7, ரவீந்திர ஜடேஜா 1 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த குஜராத்தின் அற்புதமான பந்து வீச்சில் மடங்கிய சென்னை 20 ஓவரில் 178/7 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 63 (36), சாய் சுதர்சன் 22 (17), விஜய் சங்கர் 27 (21), ரசித் கான் 10* (3), ராகுல் திவாடியா 15* (14) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தேவையான ரன்களை எடுத்து 19.2 ஓவரில் 182/5 ரன்கள் எடுக்க வைத்து எளிதாக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

திண்டாடும் சென்னை:
இந்த வெற்றிக்கு முகமது ஷமி, அல்சாரி ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தது போலவே பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளும் கடைசி நேரத்தில் முக்கியமான 10* (3) ரன்களும் எடுத்து முக்கிய பங்காற்றிய ரசித் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மொத்தத்தில் எம்எஸ் தோனி தலைமையிலான அனுபவமிக்க 4 கோப்பைகளை வென்ற சென்னையை ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் கூடிய ஒரு கோப்பையை மட்டுமே வென்றுள்ள நடப்பு சாம்பியன் குஜராத் தோற்கடித்து இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வேலையை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

csk vs gt

முன்னதாக கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் லீக் சுற்றில் சந்தித்த 2 போட்டிகளிலும் சென்னையை தோற்கடித்திருந்தது. அந்த நிலையில் இந்த போட்டியிலும் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னைக்கு எதிராக தன்னுடைய முதல் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ராஜஸ்தானின் 15 வருட சாதனையை சமன் செய்துள்ளது. ஐபிஎல் துவங்கப்பட்ட கடந்த 2008ஆம் ஆண்டு இதே போல எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் லீக் சுற்றில் 2 போட்டிகளிலும் தோற்கடித்து பின்னர் மாபெரும் ஃபைனலிலும் வீழ்த்தி கோப்பையை வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

- Advertisement -

அதனால் சென்னைக்கு எதிராக தன்னுடைய முதல் 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாக ராஜஸ்தான் சாதனை படைத்திருந்தது. அதன் பின் கடந்த 14 வருடங்களில் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற வலுவான அணிகளால் மட்டுமல்லாமல் பாதியிலேயே கலைக்கப்பட்ட புனே வாரியர்ஸ், குஜராத் லயன்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் சென்னைக்கு எதிராக தங்களுடைய முதல் 3 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்ததே கிடையாது.

CSK vs GT

ஆனால் அந்த சாதனையை கடந்த வருடம் உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் தற்போது படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை உள்ளிட்ட இதர அணிகளை காட்டிலும் 13 சீசன்களில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படும் அணியாக போற்றப்படுகிறது.

இதையும் படிங்க:IPL 2023 : காலங்களை வென்று அசத்தும் தோனி – கெயில், கில்கிறிஸ்ட், வார்னேவின் ஆல் டைம் சாதனைகளை தகர்த்து 3 வரலாற்று சாதனை

அப்படிப்பட்ட அணிக்கு எதிராக இந்த ஹாட்ரிக் சாதனையை குஜராத் படைத்துள்ளது பாராட்டத்தக்கதாகும். மறுபுறம் நேற்று வந்த அணியாக கருதப்படும் குஜராத்துக்கு எதிராக இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் சென்னை திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement