IPL 2023 : காலங்களை வென்று அசத்தும் தோனி – கெயில், கில்கிறிஸ்ட், வார்னேவின் ஆல் டைம் சாதனைகளை தகர்த்து 3 வரலாற்று சாதனை

MS Dhoni Adam Gilchrist
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்திய நடப்பு சாம்பியன் குஜராத் தங்களது வெற்றி நடையை ஆரம்பத்திலேயே துவக்கியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அதிரடியாக விளையாடி 92 (50) ரன்கள் விளாசிய ருதுராஜ் கைக்வாட் ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 10 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

ஆனால் அவர் அவுட்டான பின் ராயுடு 12, துபே 19, ஜடேஜா 1, ஸ்டோக்ஸ் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் சென்னை 178/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி, அல்சாரி ஜோசப் மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய குஜராத் சுப்மன் கில் 63 (36), சஹா 25 (16), சாய் சுதர்சன் 22 (17), விஜய் சங்கர் 27 (21) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்ததால் 19.2 ஓவரிலேயே போராடி எளிதான வெற்றி பெற்றது.

காலத்தை வென்ற தோனி:
மறுபுறம் இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வியை சந்தித்த சென்னை அடுத்ததாக லக்னோவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து சென்னைக்கும் 4 கோப்பைகளை வென்று கொடுத்து மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி 2019 உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்.

அதனால் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் அவர் கடைசியாக 2022 சீசனில் விளையாடிய நிலையில் தற்போது 315 நாட்கள் கழித்து நேற்றைய போட்டியில் விளையாடியது அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. அதனால் 132000 ரசிகர்கள் அமரும் அகமதாபாத் மைதானத்தில் பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து தோனியை காண வந்தது வர்ணனையாளர்களையும் வல்லுனர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

அப்படி தன்னைக் காண வந்த ரசிகர்களை ஏமாற்றத்தை தோனியும் கடைசி நேரத்தில் 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 14* (7) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்து மகிழ்ச்சியடைய வைத்தார். இருப்பினும் 41 வயதிலும் இந்தளவுக்கு அதிரடியாக விளையாடும் அவர் நேற்றைய போட்டியில் சற்று முன்கூட்டியே களமிறங்கியிருந்தால் நன்கு செட்டிலாகி கூடுதலாக ரன்கள் அடித்து சென்னையை வெற்றி பெற வைத்திருப்பார் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

IPL-2023முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் துவங்கப்பட்ட போது விளையாடிய 8 அணிகளில் இருந்த சச்சின், கங்குலி, டிராவிட், கம்பீர் போன்ற நட்சத்திரங்கள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் அந்த 8 கேப்டன்களில் தோனி மட்டும் 15 வருடங்களைக் கடந்து இந்தத் தொடரிலும் விளையாடும் ஒரே கேப்டனாக அசத்தி வருவது அவருடைய திறமை மற்றும் உடல் தகுதிக்கு சான்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தன்னுடைய 41 வருடம் 267 நாட்கள் வயதில் நேற்றைய போட்டியில் விளையாடிய தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் ஒரு அணியை வழி நடத்திய கேப்டன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 41 வருடம் 267 நாட்கள், 2023*
2. ஷேன் வார்னே : 41 வருடம் 249 நாட்கள், 2011
3. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் 185 நாட்கள், 2011
4. ராகுல் டிராவிட் : 41 வருடம் 133 நாட்கள், 2013
5. சவுரவ் கங்குலி : 39 வருடம் 316 நாட்கள், 2012

- Advertisement -

அதே போல் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் விளையாடும் விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையும் உடைத்த அவர் புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 41 வருடம் 267 நாட்கள், 2023*
2. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் 185 நாட்கள், 2013
3. ரிதிமான் சகா : 38 வருடம் 158 நாட்கள், 2023*

இதையும் படிங்க: IPL 2023 : அதிரடி துவக்கம் – சதத்தை தவற விட்டாலும் தனி ஒருவனாக போராடிய ருதுராஜ் – பட்லர், சச்சினை முந்தி 2 அபார சாதனை

அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் சிக்ஸர் அடித்த வீரர் என்ற கெயில் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 41 வருடம் 267 நாட்கள், 2023*
2. கிறிஸ் கெயில் : 41 வருடம் 223 நாட்கள், 2021

Advertisement