IND vs AUS : ஆஸ்திரேலியா இந்த முதல் போட்டியில் தோற்க இதுவே காரணம் – சுட்டிக்காட்டிய மார்க் வாக்

Mark Waugh
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிகள் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

IND vs AUS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்கு தங்களது முதல் இன்னிங்க்ஸை இழந்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய வீரர்களை சிறப்பாக எதிர் கொண்டு 400 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா சதமும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அரைசதமும் அடித்து அசத்தினர்.

பின்னர் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்த இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 91 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்ன என்பது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டனான மார்க் வாக் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

IND vs AUS Siraj SMith

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் மைதானம் மிகவும் பிரஷ்ஷாக இருந்தது. எனவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த சாதகமாக இருந்தது. ஜடேஜா முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை விரைவில் வீழ்த்தி இருக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் அக்சர் பட்டேல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இறுதி நேரத்தில் அடித்த ரன்கள் மற்றும் முகமது ஷமியின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது என ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக இந்த சில விடயங்கள் மாறின. அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோர் கடைசி நேரத்தில் சேர்த்த ரன்கள் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. அதேபோன்று என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் இன்னும் சில ஓவர்களை கூடுதலாக வீசி இருக்கலாம்.

இதையும் படிங்க : இளம் வீரர்கள் பாவம், 8 வருசம் சொதப்பியும் வாய்ப்பு பெறும் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி – நட்சத்திர வீரரை தாக்கிய வெங்கடேஷ் பிரசாத்

இந்த மைதானத்தில் ஷாட் பிட்ச் பந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியது தவறு. இதுபோன்ற மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை அதிக அளவில் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதோடு ஆஸ்திரேலியா அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸ்ஸிலேயே பின்னடைவை சந்தித்ததால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர்களால் அந்த சரிவிலிருந்து மீள முடியாமல் போனது என மார்க் வாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement