IND vs AUS : மீண்டும் நேரலையில் வர்ணனையாளர்களாக மோதிகொண்ட மார்க் வாக் – டிகே, இம்முறை வென்றது யார்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (4) என்ற கணக்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது. மறுபுறம் ஆரம்பத்தில் பிட்ச் பற்றி விமர்சித்த ஆஸ்திரேலியா அதை செயலில் காட்டாமல் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் கோட்டை விட்டுள்ளது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

முன்னதாக இத்தொடரில் வர்ணையாளர்களாக செயல்படும் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் ஆகியோர் அவ்வப்போது காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மீண்டும் விவாதம்:
குறிப்பாக முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்யாது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்ததற்கு இந்திய அணியில் மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற 60க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட 2 வீரர்கள் இல்லாததால் அது நடக்காது என்று மார்க் வாக் பதிலளித்தார். ஆனால் இறுதியில் தினேஷ் கார்த்திக் சொன்னது போல் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் அந்த வார்த்தை போரில் மார்க் வாக் தோற்றார் என்றே சொல்லலாம்.

DInesh Karthik Commentrator

அந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 115 ரன்களை துரத்திய இந்தியா 31/1 என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது களத்தில் இருந்த புஜாராவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சுமாராக இருப்பதாக மார்க் வாக் நேரலையில் தெரிவித்தார். அதற்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்த விதத்தால் மார்க் வாக் கடுப்பானார். இறுதியில் சஞ்சய் சஞ்சய் மஞ்ரேக்கர் உள்ளே புகுந்து அந்த விவாதம் சண்டையாக மாறாமல் தடுத்த உரையாடல்கள் பின்வருமாறு:

- Advertisement -

மார்க்: உண்மையாக இந்த ஃபீல்டிங் எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. உங்களிடம் இப்படி முட்டாள்தனமான நடுநிலை இருக்காது என்று என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் வெறும் 100+ ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள நீங்கள் புஜாரா போராடி ரன்களை சேர்க்கும் நிலையை பெற்றுள்ளீர்கள். அவர் பந்தை ஆஃப் சைடில் அதிகமாக அடித்து பேட்டிங் செய்கிறார். எனவே ஆப் சைடில் நீங்கள் ஒரு பீல்டரை வைத்திருக்கலாம்.

Mark-Waugh

டிகே: இந்த ஃபீல்டிங் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பது எனக்கு தெரிகிறது. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தொடர்ந்து கேட்போம்
மார்க்: நான் பேட் பேடில் எட்ஜ் ஆகி வரும் பந்தை பிடிக்க ஆஃப் சைடில் ஒரு பீல்டர் இருப்பதை விரும்புகிறேன். அதை போல் பாய்ண்ட் பீல்டர் கேட்ச் பிடிப்பதற்காக சற்று முன்னே இருக்க வேண்டும். அதுதான் சரியான ஃபீல்டாக இருக்கும்

- Advertisement -

அப்படி அவர் பேசிய போது புஜாரா அடுத்த பந்தை பாய்ண்ட் திசையில் அடித்ததால் தினேஷ் கார்த்திக் கலாய்க்கும் வகையில் பேசியது பின்வருமாறு. மார்க் நீங்கள் சொன்னது போல் அந்த ஃபீல்டர் சற்று முன்னே நின்றிருந்தால் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றிருக்கும்.
மார்க்: இல்லை. அந்த பீல்டர் சற்று முன்னே இருந்தால் கேட்ச் கிடைத்திருக்கலாம்.
டிகே: ஆனால் புஜாரா இடைவெளியை பயன்படுத்தி அடித்திருப்பார் என்று உங்களுக்கு தெரியவில்லையா? ஏனெனில் அவரிடம் அதிகப்படியான டைமிங் இருந்தது.
மார்க்: நாம் வெவ்வேறு மாதிரியாக நினைக்கலாம் ஆனால் நான் புஜாராவுக்கு எதிராக விளையாடினால் ஆஃப் சைடில் ஒரு பீல்டரை நிறுத்தியிருப்பேன். அதில் அவர் அவுட்டாக அதிக வாய்ப்புள்ளது.

Sanjay

டிகே: ஆனால் ரோகித் சர்மாவுக்கு அது இல்லாமல் இருந்த போது நீங்கள் அதைப் பற்றி ஏன் பேசவில்லை?
மார்க்: ரோகித் சர்மா பற்றி நான் பேசவில்லை டிகே. ஏனெனில் அவர் முற்றிலும் மாறுபட்ட வீரர்
டிகே: அப்படியானால் அந்த சமத்தில் இருந்த ஃபீல்ட் உங்களுக்கு மகிழ்ச்சியளித்ததா? நீங்கள் கேப்டனாக இருந்தால் அதைத்தான் செய்வீர்களா?
மார்க்: இது வர்ணனை செய்யும் இடமா அல்லது செய்தியாளர் சந்திப்பா என்பது எனக்கு தெரியவில்லை

இதையும் படிங்க: IND vs AUS :ஆஸி அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார். ஏன் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

டிகே: இது ஒரு போட்டி பேச்சாகும்.
மார்க்: நீங்கள் ஒரு செஷனில் என்னிடம் ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள்? மேற்கொண்டு கேட்காதீர்கள்
சஞ்சய் மஞ்ரேக்கர்: ஓகே இந்த இடத்தில் வந்துள்ள நான் ஸ்கோரை படிக்கிறேன்.

Advertisement