இவங்களுக்கு இதே வேலையா போச்சி.. ஜெய்ஸ்வாலை மட்டமாக சீண்டிய ஸ்டாய்னிஸ் – நடந்தது என்ன?

Stoinis
- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதோடு இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஷ் 110 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணிக்கு 209 ரன்கள் என்கிற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மிகப்பெரிய இலக்கினை துரத்த ஆரம்பித்த இந்திய அணியானது முதல் ஓவரிலிருந்து அதிரடியை கையில் எடுத்தது.

குறிப்பாக ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸருமாக வெளுத்துக்கட்ட அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்து கூட சந்திக்காத வேளையில் ரன் அவுட் மூலம் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அப்படி ருதுராஜ் ஆட்டம் இழந்தபோது மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் செய்த செயல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஐந்தாவது பந்தினை எதிர்கொண்ட ஜெயஸ்வால் லெஃக் சைடு திசையில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயற்சித்தார். ஆனால் ஒரு ரன் ஓடி பூர்த்தி செய்த பின்னர் இரண்டாவது ரன்னுக்கு பாதி தூரம் ஓடி வந்து மீண்டும் தான் ஓடிய திசையிலேயே திரும்பி கிரீசுக்கு வந்தார். இதனால் ஏமாற்றமடைந்த ருதுராஜ் ரன் அவுட்டாகி வெளியேறினார். அப்படி அவர் ரன் அவுட்டாகி வெளியேறிய போது ஜெய்ஸ்வால் அவரை நாம் ரன் அவுட் செய்து விட்டோமே என்ற வருத்தத்தில் திரும்பி வந்தார்.

இதையும் படிங்க : கடைசி பந்தில் ரிங்கு சிங் அடித்த பிரமாண்ட சிக்ஸ் செல்லாது.. நேற்றைய போட்டியில் நடந்த வினோதம் – ரூல்ஸ் கூறுவது என்ன?

அந்த நேரத்தில் தேவையில்லாமல் இளம் வீரரான ஜெய்ஸ்வாலை சீண்டும் விதமாக அவரின் முகத்தின் அருகே சென்ற மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அவரை கிண்டல் செய்யும்படி சிரித்தார். இப்படி இளம் வீரருக்கு எதிராக அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் நடந்து கொண்டது மோசமான செயலாக இருந்தது. அதோடு ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இந்திய அணி வீரர்களை சீண்டுவதை வேலையாகி விட்டது என்றும் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணி இறுதியில் அவர்களை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement