கடைசி பந்தில் ரிங்கு சிங் அடித்த பிரமாண்ட சிக்ஸ் செல்லாது.. நேற்றைய போட்டியில் நடந்த வினோதம் – ரூல்ஸ் கூறுவது என்ன?

Rinku-Singh-Six
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்ததால் இந்திய அணிக்கு 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இந்த இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது ஆரம்பத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அவ்வேளையில் இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி மள மளவென ரன்களை சேர்த்து வந்தது. அவர்களது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்து இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ஆட்டமிழக்க போட்டியின் இறுதி கட்டத்தில் பதட்டம் தொற்றியது.

- Advertisement -

குறிப்பாக கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்கிற நிலையில் அந்த கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரிங்கு சின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அதன் பின்னர் இரண்டாவது பந்தில் பைஸ் மூலம் ஒரு ரன் எடுக்க 4 பந்துகளில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இதனால் இந்திய அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்றாவது பந்தினை எதிர்கொண்ட அக்சர் படேல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 3 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான்காவது பந்தை எதிர்கொண்ட ரவி பிஷ்னாய் ரன் அவுட்டானார். இதனால் 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பின்னர் ஐந்தாவது பந்தினை எதிர்கொண்ட ரிங்கு சிங் பந்தினை லெக் சைடு திசையில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயற்சித்த போது அர்ஷ்தீப் சிங்கும் ரன் அவுட் ஆனார்.

- Advertisement -

இதன் காரணமாக தொடர்ச்சியாக 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் சரிந்தன. பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது ரிங்கு சிங் மிட் ஆன் திசையில் பிரமாண்ட சிக்ஸரை ஒன்றினை பறக்கவிட்டு போட்டியை முடித்தார். ஆனால் ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் செல்லாது என்றும் போட்டி முன்கூட்டியே முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது ஏன்? அதற்கு விதிமுறை கூறும் விளக்கம் என்னவெனில் :

இதையும் படிங்க : உண்மையிலே உங்கள பாத்தா தோனி மாதிரி தான் இருக்கு.. ரிங்கு சிங்கை பாராட்டி தள்ளும் – இந்திய ரசிகர்கள்

அதன்படி கடைசி பந்தினை சீன் அபோட் நோபாலாக வீசியதால் போட்டி 19.5 ஓவரிலேயே முடிந்து விட்டது. கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவை என்கிற நிலையில் பந்துவீச்சாளர் நோபால் வீசியதால் அங்கேயே உதிரியாக ஒரு ரன் வழங்கப்பட்டு விடும். அதனால் அந்த பந்தில் கிடைக்கும் கூடுதல் ரன்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று விதிமுறை கூறுகிறது.

Advertisement