உண்மையிலே உங்கள பாத்தா தோனி மாதிரி தான் இருக்கு.. ரிங்கு சிங்கை பாராட்டி தள்ளும் – இந்திய ரசிகர்கள்

Rinku-Singh
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பான பினிஷராக திகழ்ந்துவரும் ரிங்கு சிங் அண்மையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். தற்போது 26 வயதை எட்டியுள்ள அவர் இந்திய அணியின் அடுத்த பினிஷராக பார்க்கப்படும் வேளையில் இதுவரை இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டிகளை முடித்து கொடுத்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டினை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகமாகி ஆறு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் அண்மையில் நடைபெற்று முடிந்த ஏசியன் கேம்ஸ், சையத் முஸ்டாக் அலி தொடர் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பிடித்த அவர் நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்து கொடுத்தார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 208 ரன்களை குவித்தது.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 22 ரன்களுக்கே 2 விக்கெட்டை இழந்த போதிலும் இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றி இலக்கினை நோக்கி வேகமாக முன்னேறியது. ஆனால் வெற்றியின் அருகில் வந்த வேளையில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, அக்சர் பட்டேல் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

- Advertisement -

ஆனாலும் இறுதி நேரத்தில் எந்த ஒரு பதட்டமும் இன்றி 14 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்து அசால்டாக போட்டியை முடித்துக் கொடுத்தார். விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்த வேளையிலும் எந்த ஒரு இடத்திலும் நிதானத்தை தவற விடாத ரிங்கு சிங் போட்டியை கூலாக சிக்ஸ் அடித்து முடித்துக் கொடுத்தார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருடைய ஆட்டம் அப்படியே தோனியுடன் ஒத்து போவதாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : வரலாற்றின் உச்சக்கட்ட சேசிங்.. தெ.ஆ அணியை மிஞ்சிய இந்தியா.. டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

முன்வரிசை வீரர்கள் போட்டியினை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்து இக்கட்டான நிலையில் நிறுத்தினாலும் பின்வரிசையில் எந்தவொரு அழுத்தமும் இன்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரிங்கு சிங் போட்டியை முடித்து கொடுக்கிறார். எனவே நிச்சயம் இவர்தான் டி20 உலகக்கோப்பை இந்திய அணியின் பினிஷராக இருக்க வேண்டும் என்றும் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பின்வரிசையில் இருந்தால் நிச்சயம் இந்திய அணியால் எவ்வளவு பெரிய இலக்கையும் சேசிங் செய்ய முடியும் என்று தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement