வரலாற்றின் உச்சக்கட்ட சேசிங்.. தெ.ஆ அணியை மிஞ்சிய இந்தியா.. டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

IND vs AUS 22
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ளது 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 209 ரன்களை நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் இங்கிலீஷ் சதமடித்து 110, இஷான் கிசான் 52 ரன்கள் அடித்தனர். அதைத்தொடர்ந்து 209 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 0, ஜெய்ஸ்வால் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
அதனால் 22/2 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகியோர் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் சூரியகுமார் 80 (42) ரன்களும் இஷான் கிசான் 58 (39) ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தனர்.

ஆனாலும் கடைசி நேரத்தில் திலக் வர்மா, அக்சர் படேல் போன்றவர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம் தில்லாக நின்ற ரிங்கு சிங் 22* (14) ரன்கள் விளாசி சிக்ஸருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை த்ரில் வெற்றி பெற வைத்தார். அதனால் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

அதை விட இப்போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 ரன்கள் வெற்றிகரமாக துரத்திய இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 208 ரன்களை இந்தியா வெற்றிகரமாக சேசிங் செய்திருந்ததே முந்தைய சாதனையாகும். சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் 200 ரன்களை சேசிங் செய்து இந்தியா வென்றுள்ளது.

இதையும் படிங்க:டி20யில் புயல் என்பதை காட்டிய சூரியகுமார்.. கேஎல் ராகுல், ரோஹித்தை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு ராஜ்கோட் நகரில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 202 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய அதிகபட்ச இலக்காகும். அதை விட இப்போட்டியையும் சேர்த்து மொத்தமாக 5 முறை இந்தியா 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் இலக்கை சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 5*
2. தென்னாப்பிரிக்கா : 4
3. பாகிஸ்தான்/ஆஸ்திரேலியா : தலா 3

Advertisement