டி20யில் புயல் என்பதை காட்டிய சூரியகுமார்.. கேஎல் ராகுல், ரோஹித்தை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

Suryakumar Yadav 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஜோஸ் இங்கிலீஷ் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் எடுத்த உதவியுடன் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்து அசத்தியது.

ஆனால் அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு ருதுராஜ் 0, ஜெய்ஸ்வால் 22 ரன்களில் அவுட்டாகி மாற்றத்தை கொடுத்தாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து அசத்திய இசான் கிசான் 58 ரண்களும் கேப்டன் சூர்யா குமார் என்பதன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர் அதனால் இறுதியில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசியில் கில்லியாக நின்ற ரிங்கு சிங் 22 ரன்கள் அடித்து சிக்ஸருடன் அட்டகாசமான பினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

டி20 புயல்:
அந்த வகையில் ஆஸ்திரேலியாவிடம் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 80 (42) ரன்களை 190.48 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

தாமதமாக 30 வயதில் கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வித்தியாசமான ஷாட்டுகளால் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக கடந்த 2022 காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் மற்றும் சிக்ஸர்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்து சிறந்த ஐசிசி டி20 வீரர் விருதையும் வென்ற அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இப்போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற 3வது வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை தகர்த்த அவர் புதிய பெருமையை பெற்றுள்ளார். அந்த பட்டியல் (போட்டிகள்):
1. விராட் கோலி : 15 (115)
2. முகமது நபி : 14 (109)
3. சூரியகுமார் யாதவ் : 13* (54)
4. ரோஹித் சர்மா : 12 (148)

இதையும் படிங்க: 22 ரன்னுக்கு 2 விக்கெட்.. அப்போ சூர்யா பாய் என்கிட்ட சொன்னது இதுதான் – இஷான் கிஷன் அளித்த பேட்டி

அதை விட இந்தியாவை முதல் முறையாக தலைமை தாங்கிய இப்போட்டியில் 80 ரன்களை விளாசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் கேஎல் ராகுல் இந்தியாவின் கேப்டனாக முதல் முறையாக செயல்பட்ட டி20 போட்டியில் 62 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். மொத்தத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் நான் புயல் என்பதை சூரியகுமார் மீண்டும் காட்டியுள்ளார்.

Advertisement