தெம்பா பவுமாவிற்கு ஏற்பட்ட காயத்தால் மாபெரும் சாதனையை தவறவிட்ட மார்கோ யான்சன் – விவரம் இதோ

Marco-Jansen
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக செஞ்சூரியன் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான மார்கோ யான்சன் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டு துறையிலும் அசத்தலாக செயல்பட்டது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி எளிதில் வெற்றி பெற அவரது சிறப்பான செயல்பாடும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியபோது அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் 147 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 84 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி இந்திய அணிக்கு எதிராக அவரது இந்த அசத்தலான செயல்பாடு அவரை ஒரு தரமான ஆல்ரவுண்டராகவும் வெளிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மார்கோ யான்சன் மாபெரும் சாதனை ஒன்றினை தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாவினால் தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடியுள்ள மார்க்கோ யான்சன் இந்திய அணிக்கு நடைபெற்று முடிந்த போட்டியில் பேட்டிங்கில் தனது அதிகபட்ச ரன்களாக 84 ரன்களை பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா காயமடைந்ததால் முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வரவில்லை.

இதையும் படிங்க : 28 வருடமாக தொடரும் சோகம்.. மிரட்டிய ஆஸி.. இந்தியாவின் மேஜிக்கை செய்ய முடியாமல் வீழ்ந்த பாகிஸ்தான்

ஒருவேளை கடைசி விக்கெட்டுக்கு அவர் களமிறங்கி விளையாடி இருந்தால் நிச்சயம் மார்க்கோ யான்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து மாபெரும் சாதனை படைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் பவுமாவின் காயத்தின் காரணமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 84 ரன்களோடு வெளியேறி அந்த சாதனையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement