நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான பவுலராக மார்கோ யான்சன் படைத்த பரிதாப சாதனை – விவரம் இதோ

Marco-Jansen
Advertisement

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இந்த தொடரில் ஒருசில லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது கடுமையாக நிலவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் மத்தியில் ஒரு சில மோசமான சாதனைகளும் நிகழ்ந்து கொண்டு தான் வருகின்றன. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அட்டகாசமான சாதனைகள் படைக்கப்பட்ட வேளையில் பந்துவீச்சு துறையில் பவுலர்களும் சில மோசமான சாதனையை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான மார்கோ யான்சென் நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியதன் மூலம் ஒரு மோசமான சாதனையை இந்த உலகக் கோப்பை தொடரில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் விளையாடிய மார்கோ யான்சென் 9.4 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி 94 ரன்கள் விட்டுக் கொடுத்து பரிதாப நிலையை சந்தித்தார்.

- Advertisement -

அதோடு சேர்த்து இந்த போட்டியில் ஒரு நோ பாலை வீசிய அவர் 11 ஒயிடுகளை உதிரியாக வீசியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் இந்த நடப்பு உலக கோப்பை தொடரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 32 வொயிடுகளை அவர் வீசியுள்ளார்.

இதையும் படிங்க : சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – விராட் கோலி

இதன் மூலம் இந்த நடப்பு 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ஒயிடுகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி தாங்கள் விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பிடித்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வேளையில் இந்த தொடரில் அந்த அணியே இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement