சதமடித்த பிறகும் 14 போட்டியில் வெளிய உட்கார வச்சாங்க – தனது வருத்தத்தை பகிர்ந்த இந்திய வீரர்

Manoj-Tiwary
- Advertisement -

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே பல இளம் வீரர்களின் கனவாக இருக்கும். வெகு சிலருக்கு மட்டுமே இந்திய அணிக்காக விளையாடும் பாக்கியம் கிட்டி வந்த வேளையில் இளம்வீரர்களுக்கு தற்போது இந்திய அணிக்காக விளையாட தங்களது திறமையை நிரூபிக்க பல்வேறு தொடர்கள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது பல இளம் வீரர்கள் இன்றைய தேதியில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். ஆனால் 2010 க்கு உட்பட்ட காலத்தில் இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம். அப்படி இடம் பிடித்தாலும் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால்கூட அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

Manoj Tiwary 2

- Advertisement -

அதேபோன்று ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடினாலும் மீண்டும் அணியில் இடம் கிடைப்பது கஷ்டம். அந்த வகையில் இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்டவர் தான் மனோஜ் திவாரி என்றே கூறலாம். தற்போதைய மேற்குவங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரஞ்சி தொடரில் விளையாடி சதம் அடித்து அசத்தியிருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே.

2008ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் ஏழு ஆண்டுகளில், 8 வெவ்வேறு தொடர்களில் இந்திய அணிக்காக வெறும் 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து தான் ஒதுக்கப்பட்டது குறித்து பேசிய மனோஜ் திவாரி கூறுகையில் : தற்போதுள்ள இந்திய அணியின் நிர்வாகம் ஒரு வீரர் 4 முதல் 5 போட்டிகளில் சொதப்பினால் கூட அவர்களது திறமை மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளிக்கிறது.

Manoj Tiwary 1

ஆனால் நான் விளையாடிய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற பின்னரும் என்னை 14 போட்டிகள் வெளியே அமர வைத்தார்கள். அதோடு என்னுடைய பெயர் பிளேயிங் லெவனிலும் இடம் பெறவில்லை. இப்படி தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்பது எனக்கு மர்மமாகவே இருந்தது. ஆனாலும் நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்று கடின உழைப்பினை கொடுத்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

- Advertisement -

இப்படி நான் சிறப்பாக விளையாடினாலும் அடுத்த போட்டியிலேயே என்னை வெளியில் அமர வைத்து விடுவார்கள். இப்படி பலமுறை நான் வெளியில் அமர வைக்கப்பட்டது உண்டு. குறிப்பாக 14 போட்டிகள் கழித்து எனக்கு கிடைத்த வாய்ப்பில் மீண்டும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முக்கியமான நேரத்தில் ரன்களையும் சேர்த்தேன் அப்போதும் இந்திய அணி என்னை அணியில் இருந்து வெளியேற்றியது.

இதையும் படிங்க : முக்கிய ஆபத்தில் இருந்து தப்பிய ரிஷப் பண்ட். இவருக்கு மச்சம் இருக்கு – பயிற்சி போட்டியில் அசத்தல்

தற்போது உள்ள இந்திய அணியில் வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவு நான் விளையாடிய போது கிடைக்கவில்லை என்று தனது மன வருத்தத்தை பகிர்ந்துள்ள மனோஜ் திவாரி இப்போதிருக்கும் பிசிசிஐ நிர்வாகம் அப்போது இருந்திருந்தால் எனக்கு தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் தனது வேதனையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement