இதோட உன் கரியர் முடிஞ்சிச்சுன்னு கம்பீர் என்னை எச்சரித்தார்.. ஓய்வுக்கு பிறகு சம்பவத்தை பகிர்ந்த – மனோஜ் திவாரி

Manoj-Tiwary
- Advertisement -

38 வயதான இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரஞ்சி போட்டியோடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய அணிக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான மனோஜ் திவாரி 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 98 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

ஹவுரா நகரை சேர்ந்த மனோஜ் திவாரி உள்ளூர் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் அரசியல் மீது ஈடுபாடு கொண்ட அவர் படிப்படியாக கிரிக்கெட்டில் இருந்து விலகி தற்போது ஓய்வை அறிவித்துவிட்டு அடுத்த தனது பயணத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு தான் கிரிக்கெட் கரியரில் சந்தித்த முக்கிய விடயங்கள் குறித்து பேசியிருந்த மனோஜ் திவாரி கௌதம் கம்பீர் தன்னை எச்சரித்ததாக ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே கம்பீர் என்றாலே பொதுவாக மற்ற வீரர்களை சாடி, சண்டை வாங்குபவர் என்று பலரும் பேசி வரும் வேளையில் தற்போது மனோஜ் திவாரியும் கம்பீர் குறித்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் மனோஜ் திவாரி கொல்கத்தா அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் அவரை எச்சரித்துள்ளதாக கூறிய மனோஜ் திவாரி அது குறித்து கூறுகையில் : 2014-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது எனக்கும் கம்பீருக்கும் முதல்முறையாக மோதல் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது அவர் என்னை வெளிப்படையாகவே மிரட்டினார். மேலும் “இந்த போட்டி முடிந்ததும் நீ என்னை வந்து பார்”, அப்போது நான் யார் என்று உனக்கு தெரியும். உன்னுடைய கிரிக்கெட் கரியர் இன்றோடு முடிந்தது என்று என்னை பார்த்து கூறினார். அவரின் இந்த பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. அவர் இதுபோன்று என்னிடம் கூறுவார் என்று எதிர்பார்க்க வில்லை.

இதையும் படிங்க : முதல் மேட்ச்லயே பாண்டியாவுக்கு ரசிகர்கள் அந்த அவமானத்தை செய்ய விரும்புறேன்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

ஏனென்றால் நான் எப்போதுமே சீனியர் வீரர்களுக்கு மரியாதை கொடுக்கும் வீரராக இருந்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கம்பீரை பகைத்து கொண்டதால் என்னுடைய வங்கி கணக்கில் இருந்த பணமும் குறைய தொடங்கியதோடு சேர்த்து ஐபிஎல் தொடரில் வாய்ப்புகளும் பறிபோனது என மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement