முதல் மேட்ச்லயே பாண்டியாவுக்கு ரசிகர்கள் அந்த அவமானத்தை செய்ய விரும்புறேன்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash Chopra 4
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் 2024 தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது.

அதை விட இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் குஜராத்தை அதுவும் அகமதாபாத் நகரில் எதிர்கொள்ள உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் செய்யணும்:
அதற்கு மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாள் இரவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அணியை பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னுடைய முன்னாள் அணியான குஜராத்துக்கு எதிராக அகமதாபாத் ரசிகர்கள் முன்னிலையில் தன்னை வளர்த்த அணியான மும்பையின் கேப்டனாக பாண்டியா விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குஜராத் அணியிலிருந்து வெளியேறி மும்பையின் கேப்டனாக செயல்பட உள்ள பாண்டியா முதல் போட்டியில் டாஸ் வீச வரும் போது அகமதாபாத் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டு அவமானப்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதற்கான காரணத்தைப் பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் ரசிகர்கள் கோஷமிடுவதை நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“அதற்கான காரணத்தையும் சொல்கிறேன். முதல் ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடந்த அப்போட்டியில் நாங்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடினோம். ஆனால் அதில் எங்களுடைய அணியில் இருந்த அஜித் அகர்க்கரை பவுண்டரிக்கு வெளியே நிறுத்தி விட்டோம். ஏனெனில் மும்பை வீரரான அவர் மும்பைக்கு எதிராக விளையாடும் போது வான்கடே ரசிகர்கள் கோசமிட்டார்கள்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : தங்களுடைய சொந்த மண் போட்டிகளை விசாகப்பட்டினத்தில் விளையாடும் டெல்லி

“தற்போது ஹர்திக் பாண்டியா குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்த பின் மும்பைக்காக விளையாட உள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அகமதாபாத் ரசிகர்கள் காயமடையாமல் நெஞ்செரிச்சல் இல்லாமல் இருப்பார்களா? என்று நான் எதிர்பார்க்கிறேன். இல்லை நான் நம்புகிறேன். ஹர்திக் பாண்டியா டாஸ் வீசுவதற்காக செல்லும் போது ரசிகர்கள் கோஷமிடுவார்கள். இல்லையென்றால் இந்த லீக் முதிர்ச்சியை பெற்றுள்ளதாக அர்த்தம்” என்று கூறினார்.

Advertisement