விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ள ராசியில்லா இந்திய வீரர் – விவரம் இதோ

Manoj-Tiwary
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடி தேசிய அணிக்குள் நுழைந்த பல வீரர்களை நாம் பார்த்து உள்ளோம். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆண்டிற்கான ரஞ்சி தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வாய்ப்புக்காக பலரும் எதிர்பார்த்து வரும் வேளையில் இந்த ரஞ்சிக்கோப்பையுடன் ஓய்வு பெறப்போகிறேன் என்பது குறித்த மறைமுக அறிவிப்பை இந்திய அணியின் வீரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்படும் செய்தியாக மாறியுள்ளது.

ranji

- Advertisement -

அந்த வகையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் முதலில் விளையாடிய உத்திரப்பிரதேச அணி 198 ரன்களை குவிக்க அடுத்ததாக பெங்கால் அணி தங்களது முதல் இன்னிங்சில் 169 ரன்களை குவித்தது. பின்னர் 29 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய உத்திரப்பிரதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் காரணமாக 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்கால் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு விக்கெட்டுகளுக்கு 259 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி 60 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் மனோஜ் திவாரி தனது ஓய்வு குறித்த மறைமுக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் :

Manoj Tiwary 1

நாங்கள் இந்த போட்டியில் ஒரு சாம்பியன் அணியை போன்று விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். பெங்கால் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதுவும் 1938-1939 ஆண்டில் ஒரு முறையும், 1989-1990 ஆண்டுகளில் ஒரு முறையும் தான் கோப்பையை கைப்பற்றியுள்ளோம். ஆனால் இம்முறை பெங்கால் அணி கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு பலமாகவே உள்ளது.

- Advertisement -

இந்த முறை பெங்கால் அணிக்காக ரஞ்சிக் கோப்பை பெற்றுவிட்டு தான் நான் எனது வழியில் இருந்து வெளியேறுவேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறியதை பார்க்கும்போது நிச்சயம் இந்த ரஞ்சிக்கோப்பை தொடருடன் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs BAN : 5 நாளும் டஃப் கொடுத்த வங்கதேசம், மிகப்பெரிய போராட்ட வெற்றியால் இலங்கையை இந்தியா முந்தியது எப்படி?

37 வயதான மனோஜ் திவாரி கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாக இருந்தாலும் 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள ஒரு ராசியில்லா வீரராக பார்க்கப்படுகிறார். அதோடு கடந்த பல ஆண்டுகளாகவே முயற்சித்தும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காததால் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஒரு அரசியல்வாதியாக வெற்றி பெற்று தற்போது எம்.பி ஆகவும் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement