லெஜெண்ட்ஸ் லீக் 2023 : 187 ரன்ஸ்.. பின்னி போராட்டம் வீண்.. ரெய்னா அணியை சாய்த்த ஹர்பஜன் அணி சாம்பியன்

Legends League
- Advertisement -

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வந்த 2023 லெஜெண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி டிசம்பர் 9ஆம் தேதி இரவு சூரத் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசெர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 187/5 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு மார்ட்டின் கப்டில் 0, ட்வயன் ஸ்மித் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

மணிப்பால் அணி சாம்பியன்:
ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து எதிரணி பவுலர்களை பந்தாடிய ரிக்கி கிளார்க் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 80* (52), குர்கீரட் சிங் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (36) ரன்கள் எடுத்து மிரட்டினார்கள். கடைசியில் பீட்டர் திரேகோ 17 (6) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் மணிப்பால் அணி சார்பில் அதிகபட்சமாக பங்கஜ் சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 188 ரன்களை துரத்திய மணிப்பால் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ராபின் உத்தப்பாவை 40 (27) ரன்களில் அவுட்டாக்கிய ஸ்டூவர்ட் பின்னி மற்றொரு துவக்க வீரர் வால்டனையும் 29 (17) ரன்களில் காலி செய்தார். அந்த நிலைமையில் வந்த அமித் வர்மா 8 (5) ரன்களில் அவுட்டானதால் 80/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த ஆசீளா குணரத்னே அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

ஆனால் அவருடன் எதிர்புறம் 4வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கை கொடுக்க முயற்சித்த ஏஞ்சலோ பெரேராவை 30 ரன்களில் அவுட்டாக்கிய ஸ்டுவர்ட் பின்னி வெற்றிக்கு போராடினார். ஆனாலும் மற்ற பவுலர்கள் வள்ளலாக ரன்களை வாரி வழங்கியதை பயன்படுத்திய அசிலா குணரத்னே 5 சிக்சருடன் சரவெடியாக 51* (29) ரன்கள் திசாரா பெரேரா 25 (13) ரன்களும் எடுத்ததால் 19 ஓவரிலேயே 193/5 ரன்கள் எடுத்த மணிப்பால் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா எப்போது கம்பேக் கொடுப்பார் – பி.சி.சி.ஐ தகவல்

அதனால் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் 2023 லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது. அதன் காரணமாக ஸ்டுவர்ட் பின்னி 4 ஓவரில் வெறும் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் சுரேஷ் ரெய்னா தலைமையிலான அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Advertisement