இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா எப்போது கம்பேக் கொடுப்பார் – பி.சி.சி.ஐ தகவல்

Hardik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அடிக்கடி காயம் அடைந்து தொடர்ச்சியாக விளையாடாமல் அவ்வப்போது இந்திய அணிக்குள் வந்து செல்லும் வீரராகவே இருந்து வருகிறார். குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பாண்டியா இறுதிவரை இருந்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவுவார் என்று அனைவராலும் பேசப்பட்டது.

ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியிலேயே விலகினார். அதன் பின்னர் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும், அடுத்து நடைபெற இருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா இடத்தினை நிரப்பும் வீரராக தற்போது ரிங்கு சிங் விளையாடி வருகிறார். இருப்பினும் முறையான ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாத குறை இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா எப்பொழுது மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்பது புரியாமல் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது பி.சி.சி.ஐ சார்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் :

- Advertisement -

தற்போது ஹார்டிக் பாண்டியாவிற்கு என்.சி.ஏ தரப்பில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாண்டியா ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த கட்டங்களாக முன்னேறி வருகிறார். விரைவில் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இணைந்து விளையாடுவார் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணா போதும்.. நீ பெரிய ஆளா வருவ.. ரஜத் பட்டிதாருக்கு அட்வைஸ் கொடுத்த – ஏ.பி.டி

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அதற்கு முன்னதாக ஹார்டிக் பாண்டியா வெகு விரைவாக அணிக்கு திரும்பினால் தான் அவரது தலைமையில் சரியான அணியை கட்டமைத்து டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement