இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணா போதும்.. நீ பெரிய ஆளா வருவ.. ரஜத் பட்டிதாருக்கு அட்வைஸ் கொடுத்த – ஏ.பி.டி

Rajat-Patidar
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் 30 வயதான இந்தூரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரஜத் பட்டிதார் கடந்த 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் மாற்று வீரராக இடம் பிடித்தார். அப்படி மாற்று வீரராக இடம் பிடித்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த அவர் 12 ஆட்டங்களிலேயே ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 404 ரன்கள் குவித்து அசத்தினார் .

பெரிய அளவில் எந்த ஒரு எதிர்பார்ப்புகளுடன் இல்லாமல் ஐபிஎல் தொடருக்குள் வந்ததுமே சதம் அடித்து தனது பெயரை உரக்க சொன்ன ரஜித் பட்டிதாரை பெங்களூரு அணி தக்க வைத்து ஆதரவளித்தது. கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத போது அவரை ஆர்சிபி அணி தக்க வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடர்களில் மட்டும் இன்றி உள்ளூர் தொடர்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி 10 போட்டிகளில் ஆறு அரைசதங்கள் அடித்து தனது சிறப்பான நிரூபித்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் இந்திய அணியிலும் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜத் பட்டிதார் குறித்து பேசியுள்ள ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி டிவில்லியர்ஸ் கூறுகையில் : ரஜத் பட்டிதார் ஒரு அற்புதமான வீரர். ஒரு சில போட்டிகளில் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன்.

- Advertisement -

அவர் அப்போது இளமையாக இருந்தார். ஆனால் தற்போது அனுபவம் வாய்ந்த வீரராக மாறி இருக்கிறார். சிறந்த வீரரான அவரிடம் பேட்டிங் அணுகுமுறை, எப்படி ஆட்டத்தை எடுத்துச் செல்வது என்கிற அனைத்து டெக்னிக்கும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் நான் அவரிடம் ஒரு விஷயத்தை மட்டும் சரி செய்ய சொல்லுவேன். அது யாதெனில் :

இதையும் படிங்க : குரங்கு கடிச்சிருச்சு.. அதான் இப்படி.. நேரலை பேட்டியில் ரிங்கு சிங்கை கலாய்த்த சுப்மன் கில்

அவர் மைதானத்தில் கொஞ்சம் தைரியமாகவும், சண்டை மனப்பான்மையோடும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் மிகவும் அன்பானவர். மிகவும் நல்லவர். இதுவே அவருடைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திடலாம். எனவே என்னை பொறுத்தவரை அவர் தைரியமாக சண்டை மனப்பான்மையுடன் களத்தில் இருந்தால் நிச்சயம் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement