IPL 2023 : ரோஹித் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையை பதிவு செய்த – கொல்கத்தா வீரர்

Mandeep-singh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Shardul Thakur

- Advertisement -

அதன் காரணமாக முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் காரணமாக 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய மந்தீப் சிங் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Mandeep Singh 1

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகமுறை டக் அவுட்டான வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரே இருந்து வந்தனர். இருவரும் தலா 14 முறை ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் மிக மிக மோசமான சாதனையை சமன் செய்த பெங்களூரு அணி – பாவங்க அவங்க

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டக் ஆனதன் மூலம் மந்தீப் சிங் 15 முறை டக் அவுட் ஆகி ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான மோசமான சாதனையை படைத்துள்ளார். இந்த வரிசையில் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 14 முறையும், பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், ரகானே மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் 13 முறை டக் அவுட்டாகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement