IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் மிக மிக மோசமான சாதனையை சமன் செய்த பெங்களூரு அணி – பாவங்க அவங்க

Suyash-Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது தங்களது அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

KKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெளியான ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் பெங்களூரு அணியானது ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஒரு சாதனையை சமன் செய்துள்ளது. அந்த வகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த வேளையில் மும்பை அணி அதிகபட்சமாக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

RCB vs KKR

அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 தடவை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவினையும் பெற்று வரும் பெங்களூரு அணியானது இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் அந்த அணி கோப்பையை வெல்லும் வெல்லும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம். இந்நிலையில் மேலும் ஒரு ஏமாற்றம் அளிக்கும் விதமாக நேற்று பெங்களூர் அணி பெற்ற இந்து தோல்வி இந்த சீசனிலும் அவர்களின் நிலை இதுதான் என்பதை வெளிக்காட்டியுள்ளது. நேற்றைய போட்டியில் 123 ரன்களுக்கு ஆல்அவுட்டானது மூலம் பெங்களூரு அணி அதிக முறை 125 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன டீம் என்ற மோசமான சாதனையை டெல்லி அணியுடன் பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : மும்பை மைதானத்தில் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – விவரம் இதோ

இதுவரை டெல்லி அணி தான் 125 ரன்களுக்குள் 15 முறை ஆல் அவுட் ஆகியுள்ளது. அந்த சாதனையை நேற்று பெங்களூர் அணி சமன் செய்துள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் 123 ரன்களுக்கு ஆல்அவுட்டானது மூலம் ஐபிஎல் வரலாற்றில் 15 முறை 125 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன அணி என்ற பட்டியலில் டெல்லி அணியுடன் பெங்களூரு அணி மோசமான சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement