IPL 2023 : மும்பை மைதானத்தில் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – விவரம் இதோ

CSK-Fans
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள் தற்போதே ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வரும் வேளையில் நாளுக்கு நாள் இந்த தொடரை காண ரசிகர்கள் மத்தியில் ஆவலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் போதும் போட்டி சனிக்கிழமை நடைபெற இருக்கின்றன.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

இந்த போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் அதிகளவு ஆர்வம் இருக்கும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் அணிகளாக திகழ்வதால் நிச்சயம் இந்த போட்டியின் போது இரு அணி ரசிகர்களும் மிகப்பெரிய ஆரவாரத்தை மைதானத்தில் எழுப்புவார்கள். ஆனால் அதே வேளையில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்காக மட்டுமே ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி பிரத்தேகமாக இரண்டு கேலரிகளை மும்பை ரசிகர்களுக்காக மட்டும் முன்பதிவு செய்துள்ளார்.

csk fans

இந்த விடயம் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் எந்த மைதானத்தில் போட்டிகள் நடந்தாலும் சென்னை அணிக்கு என்று மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் இருந்து வரும் வேளையில் மும்பை மைதானத்தில் சென்னை அணியின் ரசிகர்களை அதிகம் பார்க்கக் கூடாது என்பதற்காகவே நீதா அம்பானி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.

- Advertisement -

இந்த முடிவானது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மும்பை மைதானத்தில் மும்பை அணியின் ரசிகர்களே அதிகமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ரசிகர்களுக்காக டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்த அவரது இந்த நடவடிக்கையை எதிர்த்து ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IPL 2023 : என்னுடைய இந்த அதிரடியான ஆட்டமே அவரை பார்த்து கத்துக்கிட்டது தான் – ஷர்துல் தாகூர் பேட்டி

என்னதான் மும்பை மைதானத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள் இருக்கக்கூடாது என்று அவர்கள் நினைத்திருந்தாலும் நிச்சயம் மும்பை மைதானத்திலும் சிஎஸ்கே ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement