IPL 2023 : என்னுடைய இந்த அதிரடியான ஆட்டமே அவரை பார்த்து கத்துக்கிட்டது தான் – ஷர்துல் தாகூர் பேட்டி

Shardul-Thakur
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலேயே வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ராணா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வேளையில் ஒருபுறம் துவக்க வீரர் குர்பாஸ் மட்டும் அரை சதம் அடித்து ஓரளவுக்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து அவரும் ஆட்டம் இழக்கவே கொல்கத்தா அணி 89 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் இந்த சரிவிலிருந்து காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழக்க கொல்கத்தா அணி 89 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் நிச்சயம் அந்த அணி 160 ரன்கள் கூட தொடாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரிங்கு சிங்களுடன் ஏழாவது வீரராக களமிறங்கி ஜோடி சேர்ந்த வேகப்பந்து பேச்சாளர் ஷர்துல் தாகூர் தான் இறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடியை வெளிப்படுத்தினார். குறிப்பாக முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர் வேறு எந்த இடத்திலும் பொறுமை காக்காமல் 29 பந்துகளை சந்தித்து மூன்று சிக்சர் மற்றும் 9 பவுண்டரி என 68 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி காரணமாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது.

Shardul Thakur

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே குவிக்க 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து அவரது இந்த பேட்டிங் அதிரடிக்கு யார் இன்ஸ்பிரேஷன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷர்துல் தாகூர் கூறுகையில் : பிக் ஹிட்டிங் என்றாலே அது சேவாக் தான். அவர்தான் என்னுடைய குரு அவரைவிட யாரால் வேகப்பந்து வீச்சாளர்களை இப்படி அடிக்க முடியும். அவரை பார்த்துதான் இத்தனை வருடங்களாக இப்படி விளையாட வேண்டும் என்ற கனவுகளோடு விளையாடி வருகிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : குருவே நீங்க இப்டி சொல்லலாமா, ரசிகனை போல் பாராட்டிய சேவாக்கிற்கு – நன்றியுடன் தாகூர் கொடுத்த பதில் இதோ

அந்த வகையில் இன்றைய போட்டியில் நான் அதிரடியாக விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி என்று ஷர்துல் தாகூர் தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏழாவது மற்றும் அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கி ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரசலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஷர்துல் தாகூர் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement