ஐ.பி.எல் 2022 : புதிய அணியை வாங்க ஆர்வம் காட்டும் பிரபல கால்பந்து அணி – இவங்களுக்கு பேன்ஸ் அதிகமாச்சே

IPL

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல டி20 லீக் தொடரான ஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற உள்ளது. நடைபெற்று முடிந்த 14வது சீசனில் சென்னை அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியதன் பின்னர் தற்போது அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் அடுத்த ஆண்டு விளையாடும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL
IPL Cup

இதன் காரணமாக தற்போதுள்ள ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு டிசம்பர் மாதம் வீரர்களுக்கான மெகா ஏலமும் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னர் இரண்டு புதிய அணிகளுக்கான ஒப்பந்த ஏலவும் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் புதிய அணிகளில் ஒன்றை வாங்க ஐரோப்பாவின் பிரபல கால்பந்து அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகம் ஐபிஎல் அணியை வாங்கி இருப்பது ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

manchester 1

ஏனெனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பிரபல கால்பந்து வீரர்கள் பலர் விளையாடியிருக்கின்றனர். குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற பல வீரர்கள் விளையாடி உள்ளனர்.

இதையும் படிங்க : டி20 உ.கோ : பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 இந்திய அணியை கணித்துள்ள இர்பான் பதான் – பிளேயிங் லெவன் இதோ

- Advertisement -

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கும் வேளையில் கிரிக்கெட் அணியையும் அவர்கள் வாங்கினால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement