டி20 உ.கோ : பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 இந்திய அணியை கணித்துள்ள இர்பான் பதான் – பிளேயிங் லெவன் இதோ

pathan 1
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி தங்களது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி நிச்சயம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pak

- Advertisement -

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனையும் உத்தேசமாக கணித்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தொகுத்து வழங்கியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் :

அவர் தேர்வு செய்துள்ள இந்த இந்திய அணியில் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் சூரிய குமார் யாதவை தேர்வு செய்துள்ள இர்பான் பதான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

pant 1

ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பவுலர்களின் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா ஆகியோரை தேர்வு செய்த பதான் சுழற்பந்து வீச்சாளர்களில் வருன் சக்ரவர்த்தியை மட்டும் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த – வி.வி.எஸ் லக்ஷ்மணன்

இர்பான் பதான் தேர்வு செய்த பிளேயிங் லெவன் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) கே. ராகுல், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) முஹமது ஷமி, 9) வருண் சக்ரவர்த்தி, 10) பும்ரா, 11) புவனேஷ்வர் குமார்.

Advertisement