பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த – வி.வி.எஸ் லக்ஷ்மணன்

- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி தங்களது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி நிச்சயம் பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Pak

- Advertisement -

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனையும் உத்தேசமாக கணித்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மணன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தொகுத்து வழங்கியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் :

அவர் தேர்வு செய்துள்ள இந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் 3வது வீரராக கேப்டன் விராத் கோலியும், மிடில் ஆர்டரில் 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் மற்றும் 5-ஆவது வீரராக விக்கெட் கீப்பர் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

sky

மேலும் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தெரிவு செய்துள்ள லக்ஷமணன் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தெரிவு செய்துள்ளார். இதன் காரணமாக இந்த அணியில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் சுழற்பந்து வீச்சாளராக ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நல்ல டேலன்ட் இருந்தும் இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் கிடைக்காதாம் – காரணம் இதுதான்

இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) கே. ராகுல், 3) விராட் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ராகுல் சாஹர், 9) வருண் சக்ரவர்த்தி, 10) பும்ரா, 11) புவனேஷ்வர் குமார்.

Advertisement