நல்ல டேலன்ட் இருந்தும் இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் கிடைக்காதாம் – காரணம் இதுதான்

Ishan-3
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகிய மூவரும் துவக்க வீரர்களாக இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

rahul 2

- Advertisement -

இதன் காரணமாக துவக்க வீரர்களுக்கான இடத்தில் நல்ல போட்டி நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் அனுபவ வீரர்களான ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரே துவக்க வீரராக களமிறங்குவார்கள். இதன் காரணமாக இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 46 பந்துகளை சந்தித்த அவர் 70 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரால் மிடில் ஆர்டரில் அந்த அளவு பிரமாதமாக ஆட முடியுமா என்பது தெரியாது. மேலும் ஐபிஎல் தொடரில் கூட ஓப்பனராக அதிரடி காட்டிய இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சொதப்பி வந்தார். அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Sky

அதுமட்டுமின்றி பவுலர்களை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விளாசும் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இந்திய அணியின் 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இஷான் கிஷன் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை. எனவே நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் இஷான் கிஷன் துவக்க வீரராகவும், ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சி போட்டியின் போது தனது வித்தைகளை ரிஷப் பண்டிற்கு கற்றுக்கொடுத்த தோனி – வைரலாகும் வீடியோ

இதன் காரணமாக இஷான் கிஷனுக்கு இந்த உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்று தோன்றுகிறது. மேலும் தற்போது உள்ள பார்மில் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை கொடுக்க முடியும் என்பதும் எவ்வளவு பெரியதாக இலக்காக இருந்தாலும் சேசிங் செய்யவும் முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement