ஒரு மணி நேரம் லேட்டானாலும் பரவால்ல.. என் ரசிகர்களுக்காக அதை செய்றேன்.. தல தோனி ஓப்பன்டாக்

MS Dhoni CSk
- Advertisement -

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவரது தலைமையில் இந்தியா 2010இல் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்தது.

மேலும் வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக போற்றப்படும் அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஃபினிஷராகவும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். முன்னதாக 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி நீளமான முடியுடன் கொண்டிருந்த ஹேர் ஸ்டைல் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றது.

- Advertisement -

லேட்டானாலும் ரசிகர்களுக்காக:
அந்த காலங்களில் நீண்ட முடியுடன் எதிரணி பவுலர்கள் போடும் பந்துகளை அதிரடியாக அவர் பறக்க விட்ட ஹெலிகாப்டர் சிக்சர்களை ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாது. சொல்லப்போனால் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் முஸ்ரஃக் “உங்களுடைய ஹேர் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்துள்ளதால் அதை மாற்றாமல் வைத்திருங்கள்” என்று தோனியிடம் 2005இல் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார்.

ஆனால் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற பின் தம்முடைய நீளமான முடிகளை வெட்டிய தோனி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார். இந்நிலையில் நீளமான முடிகளுடன் கூடிய ஸ்டைலை ரசிகர்களுக்காக மீண்டும் வைத்துள்ளதாக தெரிவிக்கும் தோனி அதை வைத்திருப்பதால் ஒவ்வொரு முறையும் தயாராக ஒரு மணி நேரம் தாமதமாவதாக கலகலப்புடன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றிய ஸ்கிப்பர் பைப்ஸ் எனும் தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முன்பெல்லாம் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்லும் போது நான் 20 நிமிடங்களில் தயாராகி விடுவேன். மேக்-அப் மற்றும் ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை 20 நிமிடத்தில் சரி செய்து தயாராகி விடுவேன். ஆனால் தற்போது எனக்கு 1 மணி நேரம் 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது”

இதையும் படிங்க: கடந்த 50 வருடங்களில் பார்த்த டாப் 10 சதங்களில் இதுவும் ஒன்னு.. ராகுலை பாராட்டிய 2 இந்திய ஜாம்பவான்கள்

“எனவே முடியை அலங்காரம் செய்வதற்காக நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அலுப்பு தட்டுகிறது. ஆனால் என்னுடைய ரசிகர்கள் இந்த புதிய ஹேர் ஸ்டைலை விரும்புவதால் அதை நான் பின்பற்றி வருகிறேன். அவர்கள் விரும்புவதால் இதை நான் இன்னும் சில காலம் தொடர உள்ளேன். ஆனால் அதை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. எனவே ஒரு நாள் இது போதும் என்று நினைத்து மீண்டும் நறுக்கி விட முடிவு செய்வேன்” என்று கூறினார்.

Advertisement