கடந்த 50 வருடங்களில் பார்த்த டாப் 10 சதங்களில் இதுவும் ஒன்னு.. ராகுலை பாராட்டிய 2 இந்திய ஜாம்பவான்கள்

KL rahul Century
- Advertisement -

செஞ்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 245 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக காகிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 2வது நாள் முடிவில் 256/5 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் டீன் எல்கர் சதமடித்து 140* ரன்கள் குவித்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 2* விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். முன்னதாக இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

பாராட்டிய ஜாம்பவான்கள்:
அதனால் 107/5 என சரிந்த இந்தியா 200 ரன்களாவது தொடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் சவாலான பிட்ச்சில் தென்னாப்பிரிக்க பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக சுமாரான பந்துகளில் அதிரடியாக ரன்கள் சேர்த்த அவர் தரமான பந்துகளுக்கு மதிப்பு கொடுத்து மொத்தம் 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் 101 (137) ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த 50 வருடங்களாக தாம் பார்த்த இந்திய கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் அடித்த சதம் டாப் 10 சிறந்த சதங்களில் ஒன்றாக இருக்கும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இன்னிங்ஸ். கடந்த 50 வருடங்களாக கிரிக்கெட்டை பார்த்து வருகிறேன்”

- Advertisement -

“அதில் கேஎல் ராகுல் அடித்த இந்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியர்கள் அடித்த டாப் 10 சதங்களில் ஒன்றாக இருக்கும்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “அவருடைய ஆர்வத்தை விரும்புகிறேன். தடுப்பாட்டம் அல்லது அட்டாக் செய்வது ஆகிய எதுவானாலும் அவர் சிறப்பாக இருந்தார். ஒரு நாட்டின் மைல்கல் அளவுக்கு இது அவருடைய சிறந்த சதம்”

இதையும் படிங்க: இப்படியா கேப்டன்ஷிப் பண்ணுவீங்க.. நானும் கோலியும் இதை செஞ்சுருக்க மாட்டோம்.. ரோஹித் தவறை விமர்சித்த சாஸ்திரி

“குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் இது இந்தியர்கள் அடித்த சிறந்த சதங்களில் ஒன்றாகும். சவாலான சூழ்நிலைகளில் அவர் அபாரமாக செயல்பட்டார். இந்த செயல்பாடுகளால் அவர் கண்டிப்பாக மிடில் ஆர்டரில் தமக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். வருங்காலங்களில் விக்கெட் கீப்பராக இல்லாவிட்டாலும் இந்தியாவுக்கு 5 அல்லது 6வது இடத்தில் விளையாட அவர் வேண்டும்” என்று கூறினார்.

Advertisement