இப்படியா கேப்டன்ஷிப் பண்ணுவீங்க.. நானும் கோலியும் இதை செஞ்சுருக்க மாட்டோம்.. ரோஹித் தவறை விமர்சித்த சாஸ்திரி

Ravi Shastri 2
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக தொடங்கியுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 245 ரன்கள் எடுத்தது. டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 5, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் அபாரமான சதமடித்து 101 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 256/5 ரன்கள் குவித்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அனுபவ துவக்க வீரர் டீன் எல்கர் சதமடித்து 140* ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித்தின் தவறு:
அவரை தவிர்த்து அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். முன்னதாக இந்த போட்டியில் இந்தியா ஆல் அவுட்டானதும் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் 2 ரன்களில் ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் அவுட்டானார்.

அதை தொடர்ந்து உணவு இடைவெளி முடிந்ததும் இந்தியாவின் முதன்மை பவுலர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை வைத்து டீன் எல்கர் – டோனி டீ ஜோர்சியை அட்டாக் செய்யும் முடிவை எடுக்காத கேப்டன் ரோஹித் சர்மா அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோரை உபயோகப்படுத்தினார். அதை பயன்படுத்திய தென்னாப்பிரிக்க ஜோடி கடினமான நேரத்தில் எளிதாக 8 ஓவரில் 42 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திய பின்பே பும்ரா – சிராஜை மீண்டும் ரோகித் சர்மா கொண்டு வந்தார்.

- Advertisement -

அந்த வகையில் உணவு இடைவேளை முடிந்ததும் முதன்மை பவுலர்களை பயன்படுத்தாத ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விமர்சித்தார். குறிப்பாக விராட் கோலி கேப்டனாக இருந்த போது தாங்கள் இதை செய்ததில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உணவு இடைவெளிக்குப்பின் சரியான பவுலர்களை பயன்படுத்துவதில் இந்தியா பெரிய தவறு செய்து விட்டது”

இதையும் படிங்க: 11 ரன்ஸ் லீடிங்.. ரிட்டையராகும் தொடரில் மல்லுக்கட்டும் எல்கர் அசத்தல் சாதனை.. இந்தியா திருப்பி அடிக்குமா?

“அது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் குவிப்பதற்கு வழி வகை செய்தது. நுணுக்கங்கள் அடிப்படையில் இது பெரிய தவறு என்று கருதுகிறேன். சுமாரான எதிரணிக்கு எதிராக கூட சர்துள் – பிரசித் ஆகியோரை கடைசியாக தான் பயன்படுத்த வேண்டும். நான் பயிற்சியாளராக இருந்த போது இது பற்றி பலமுறை விவாதித்துள்ளோம். செசனின் துவக்கத்திலேயே உங்களுடைய சிறந்த 2 பவுலர்களை பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement