ஃபிட்னெஸ் இல்லையா? ரோஹித்தை இம்பேக்ட் பிளேயராக மட்டும் அவமானப்படுத்துவது ஏன்? ஜெயவர்தனே விளக்கம்

Mahila Jayawardane
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறி 9வது இடத்தில் தவித்தது. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற மும்பை டாப் 4 இடத்திற்குள் நுழைந்து பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. அதற்கு காயத்திலிருந்து குணமடைந்து வந்த ஜஸ்ப்ரித் பும்ரா, நம்பிக்கை நாயகன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் ஆரம்பகட்ட போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்காத ரோஹித் சர்மா ஓய்வு பெறுமாறு விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் சமீபத்திய போட்டிகளில் 3 அரை சதங்கள் அடித்து ஃபார்முக்கு வந்துள்ளார். முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித்தை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து மும்பை நிர்வாகம் நீக்கி அவமானப்படுத்தியது ஏற்கனவே ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

- Advertisement -

இம்பேக்ட் பிளேயர்:

அப்படிப்பட்ட நிலையில் இத்தொடரில் பெரும்பாலான போட்டிகளில் ரோஹித் சர்மாவை ஃபிட்டாக இல்லை என்று கருதும் மும்பை நிர்வாகம் வெறும் இம்பேக்ட் வீராராக மட்டும் பயன்படுத்தி வருகிறது. இத்தனைக்கும் இந்தியாவுக்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி உட்பட ரோகித் அனைத்து போட்டிகளிலும் முழுமையாக விளையாடி வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். அப்படிப்பட்ட அவரை ஐபிஎல் தொடரில் மும்பை நிர்வாகம் இம்பேக்ட் வீரராக மட்டும் பயன்படுத்தி அவமானப்படுத்துவதாக ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் பௌண்டரி எல்லையில் வேகமாக ஃபீல்டிங் செய்பவரை மும்பை நிர்வாகம் விரும்புவதாக பயிற்சியாளர் மகிளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். அதனாலேயே லேசான காயத்துடன் இருக்கும் ரோஹித்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்துவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித்தை ஆரம்பம் முதலே அவ்வாறு பயன்படுத்தவில்லை”

- Advertisement -

ஜெயவர்த்தனே விளக்கம்:

“ஆனால் எங்களுடைய அணியில் நிறைய வீரர்கள் 2 வேலைகளை செய்கிறார்கள். அவர்களில் பலர் பௌலிங் செய்கின்றனர். சில மைதானங்களில் பௌண்டரி எல்லையில் வேகமாக ஓடக்கூடியவர்கள் தேவைப்படுகிறது. அந்த விஷயம் இந்த முடிவில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் லேசான காயத்தைச் சந்தித்தார். எனவே அவரை நாங்கள் வேகமாகத் தள்ள விரும்பவில்லை”

இதையும் படிங்க: குஜராத்துக்கு நல்ல செய்தி.. ஊக்க மருந்தால் தடை பெற்ற ககிஸோ ரபாடா பற்றி தெ.ஆ நிர்வாகம் அறிவிப்பு

“எனவே அவருடைய முக்கியமான பேட்டிங் வைத்து நாங்கள் அனைத்தையும் நிர்வகிக்கிறோம். அதே சமயம் தமக்கு கிடைக்கும் வேலைகளில் ரோஹித் அற்புதமாக பங்காற்றி வருகிறார். ஒட்டுமொத்தமான திட்டம் என்னவெனில் எங்களுக்கு பவுலிங் ஆப்ஷன்கள் மற்றும் ஃபீல்டர்கள் தேவை” என்று கூறினார். மொத்தத்தில் ரோஹித்திடம் முழுமையான ஃபிட்னஸ் இல்லாததாலேயே அவரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்துவதாக ஜெயவர்த்தனே கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement