ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையின் நட்சத்திரம் ரபாடா விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டியில் விளையாடிய அவர் திடீரென்று ஏப்ரல் மாதத் துவக்கத்திலேயே நாடு திரும்பினார். அதற்கு ரபாடா சொந்தக் காரணங்களுக்காக தென்னாப்பிரிக்கா திரும்பியதாக குஜராத் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது.
ஆனால் சில தினங்களுக்கு முன் ஊக்க மருந்து சோதனையில் சோதனையில் தடை பெற்றதாலயே ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியதாக ரபாடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதாவது 2025 எஸ்ஏ டி20 தொடரில் அவர் எம்ஐ கேப் டவுன் அணிக்காக விளையாடினார். அங்கே அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் அவர் ஏதோ ஒரு வகையில் ஊக்கமருந்து உட்கொண்டது ஏப்ரல் 1ஆம் தேதி தெரிய வந்துள்ளது.
ரபாடாவுக்கு தடை:
அதன் காரணமாக கிரிக்கெட்டில் ராபடா விளையாட தென்னாப்பிரிக்க வாரியம் தற்காலிகமாக 3 மாதம் தடை விதித்தது. அது பற்றி ரபாடா கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது பின்வருமாறு. “நான் ஏமாற்றிய அனைவரிடமும் மன்னிப்பு தெரிவிக்கிறேன். இனிமேல் கிரிக்கெட்டில் விளையாடும் பாக்கியத்தை நான் ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன்”
“இந்த பாக்கியம் என்னை விட பெரியது. அது என்னுடைய தனிப்பட்ட ஆசைகளுக்கு அப்பாற்பட்டது” என்று கூறியிருந்தார். மறுபுறம் இந்தியாவை விட்டு ஏற்கனவே வெளியேறி இருந்த ரபாடா தென் ஆப்பிரிக்காவில் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு தற்காலிக தடையை ஏற்றுக்கொண்டார். அத்துடன் ஊக்க மருந்து தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அவர் சிகிச்சைகளில் தன்னை உட்படுத்திக் கொண்டார்.
நல்ல செய்தி:
அந்த சிகிச்சையில் ரபாடா தற்போது குணமடைந்துள்ளதாக “போதைப்பொருள் இல்லாத விளையாட்டுக்கான தென்னாபிரிக்க நிறுவனம் (எஸ்ஏஐடிஎஸ்)” என்ற அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் தவறுகளை ஒப்புக்கொண்ட ராபடா விரைவாக சிகிச்சைகளை மேற்கொண்டு குணமடைந்து வந்துள்ளார். அதனால் அவருடைய 3 மாத தடை தற்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ.. அவ்வளவு அதிகமாக மலர்வார்.. 14 வயது வீரரை பாராட்டிய – பாரத பிரதமர்
அந்த ஒரு மாதத் தடை கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. அந்த வகையில் தற்போது ரபாடா மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். இந்த செய்தி தென்னாபிரிக்க அணி மற்றும் குஜராத் அணிக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக விரைவில் அவர் குஜராத்துக்கு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



