அஷ்வினை சமாளிக்க அழைப்பு விடுத்த ஆஸி நிர்வாகம். கையில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த இந்திய வீரர் – சுவாரசிய தகவல்

Mahesh-Pithiya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மோதும் முதல் போட்டியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக இடம் பிடித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த முதல் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை மைதானத்தில் பல ஆண்டுகளாக விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதனால் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இடது கை வீரர்களுக்கு எதிராக அதிகளவு சவாலை கொடுக்கும் வீரராக பார்க்கப்படும் அஸ்வின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் சிறப்பாக பந்துவீச கூடியவர்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு எதிரான திட்டங்களை எவ்வாறு கையாள்வது? என்பது குறித்து தற்போது ஆஸ்திரேலிய அணி ஒரு புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி கடந்த பிப்ரவரி மாதம் டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்தபோது அஸ்வினை சமாளிக்க பரோடா வீரர் மகேஷ் பித்தியாவை வலைப்பயிற்சிக்கு அழைத்து அவரை நெட் பவுலராக பந்து வீச வைத்து பயிற்சி மேற்கொண்டது.

ஏனெனில் அச்சு அசலாக அஸ்வினை போன்றே பந்துவீசும் அவரை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுத்தால் அஸ்வினை சமாளித்து விடலாம் என்று அவர்கள் நினைத்தனர். அதேபோன்று இம்முறையும் உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா அணியின் நிர்வாகத்திடம் இருந்து மகேஷ் பித்தியாவிற்கு அழைப்பு சென்றுள்ளது.

- Advertisement -

இது குறித்து பேசிய மகேஷ் பித்தியா கூறுகையில் : அக்சர் பட்டேலுக்கு பதிலாக அஸ்வின் அணியில் இணைந்திருக்கிறார் என்று தெரிந்ததும் ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து வலைப்பயிற்சியில் பந்து வீசவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இது ஒரு மகிழ்ச்சியான விடயம் தான். சர்வதேச அளவில் உயர்தரமாக இருக்கும் ஒரு அணிக்காக பணியாற்றுவது மகிழ்ச்சியான ஒரு விடயம் தான்.

இதையும் படிங்க : வீடியோ : W.W.W.. ஹாட்ரிக் எடுத்து நெதர்லாந்தை ஓட விட்ட ஸ்டார்க்.. வேர்ல்ட் கப் வந்ததும் மிரட்டல்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை

ஆனாலும் நான் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன். ஏனெனில் நான் இன்று இந்த அளவிற்கு முன்னேறுவதற்கு காரணமே எனது பரோடா மாநில அணிதான். தற்போது பரோடா அணிக்காக நான் விளையாட வேண்டிய சூழல் உள்ளது. எப்போதுமே எனது முன்னுரிமை பரோடா அணிக்காக மட்டுமே தான். அதன் காரணமாகவே இந்த வாய்ப்பை தான் மறுத்ததாகவும் மகேஷ் பித்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement