W.W.W.. ஹாட்ரிக் எடுத்து நெதர்லாந்தை ஓட விட்ட ஸ்டார்க்.. வேர்ல்ட் கப் வந்ததும் மிரட்டல்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை

hat trick starc
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் பயிற்சி போட்டியில் நடைபெற்று வருகின்றன. அதில் செப்டம்பர் 30ஆம் தேதி மதியம் கௌகாத்தியில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதே போலவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியிலும் மழை வந்தது.

இருப்பினும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மழை ஒதுங்கியதால் 23 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 166/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு வார்னர், லபுஸ்ஷேன் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. அதே சமயம் ஜோஸ் இங்லீஷ் 0, கிளன் மேக்ஸ்வெல் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55, கேமரூன் கிரீன் 34 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஸ்டார்க்கின் ஹாட்ரிக்:
பந்து வீச்சில் ஓரளவு அசத்திய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக வேன் பீக், பஸ் டீ லீடி வேன் டெர் மெர்வி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 167 ரன்கள் துரத்திய நெதர்லாந்துக்கு முதல் ஓவரை வீசிய மிட்சேல் ஸ்டார் 5வது பந்தில் மேக்ஸ் ஓ’தாவுத்தை கோல்டன் டக் அவுட்டாக்கி அடுத்து வந்த பரேசியையும் 6வது பந்தில் கிளீன் போல்ட்டாக்கினார்.

அதை தொடர்ந்து மீண்டும் 3வது ஓவரை வீசிய அவர் முதல் பந்திலேயே டீ லீடியையும் கோல்டன் டக் அவுட்டாக்கி மொத்தம் 3 தொடர்ச்சியான பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்து ஹாட்ரிக்கை பதிவு செய்து மிரட்டினார். குறிப்பாக கடந்த 2 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்த அவர் பொதுவாகவே ஐசிசி தொடர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவதில் வல்லவராக இருந்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்ட அவர் மீண்டும் உலகக் கோப்பை வருவதற்கு முன்பாக மிரட்டலான ஃபார்முக்கு வந்து அக்டோபர் 8ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் சிந்திக்க காத்திருக்கும் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த போட்டியில் மிரட்டினார். மறுபுறம் அதன் காரணமாக மோசமான துவக்கத்தை பெற்ற நெதர்லாந்துக்கு விக்ரம்ஜித் சிங் 9, எங்கெல்பேர்சச்ட் 9, கேப்டன் எட்வர்ட்ஸ் 14 ரன்களில் அவுட்டாகி மேலும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அக்கெர்மேன் 31* (37) ரன்களும் வேன் பீக் 9* (9) ரன்களும் எடுத்து போராடியதால் 14.2 ஓவர்களில் நெதர்லாந்து 84/6 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனால் நெதர்லாந்து தோல்வியிலிருந்து தப்பிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement