இவரை எதுக்கு டீம்ல சேத்தீங்க. டி20 ல சேன்ஸ் குடுத்தது கூட தப்புதான் – மதன்லால் விளாசல்

Madan Lal
- Advertisement -

அடுத்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடும் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் காயத்திலிருந்து திரும்பியுள்ள அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ள வேளையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

INDvsWI

- Advertisement -

கடைசியாக புவனேஸ்வர் குமார் :
இந்த தொடரில் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் கலக்கிய ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக செயல்பட்ட ஒரு சில வீரர்கள் கழட்டி விடப்பட்டுள்ளார்கள்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் இருந்து அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் முழுமையாக நீக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்காத அவர் ரன்களை வாரி வழங்கி மோசமாக பந்துவீசியிருந்தார். இதன் காரணமாக ஒருநாள் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கழட்டி விடப்பட்டுள்ள அவர் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

Bhuvi

டி20 அணியில் எதற்கு:
இருப்பினும் அவரின் அனுபவத்தையும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கையும் மதித்து கடைசி முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி வாய்ப்பில் அவர் சொதப்பினால் இந்திய கிரிக்கெட் அணியில் அவரை பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும்.

- Advertisement -

இந்நிலையில் டி20 அணியிலும் எதற்காக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் மதன்லால் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு செய்தி குறிப்பில்,

Bhuvi

“இந்திய ஒருநாள் அணியில் இருந்து புவனேஸ்வர் குமார் நீக்கி தேர்வு குழுவினர் சரியான முடிவை எடுத்துள்ளார். ஆனால் அவர் டி20 அணியில் இடம் பிடித்துள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அனேகமாக கடைசி முறையாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நீண்ட காலம் விளையாட முடியும் என தேர்வு குழுவினர் அவருக்கு உணர்த்த விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போது வெறும் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள புவனேஸ்வர் குமாரிடம் ஆரம்ப காலங்களில் எதிரணி பேட்டர்களை திணறடித்த வேகம், ஸ்விங் ஆகியன தற்போது இல்லை. கடைசியாக அவர் விளையாடியுள்ள 6 சர்வதேச போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து மோசமான பார்மல் இருந்து வருகிறார்.

Bhuvi

இளம் வீரர்கள் வந்தாச்சு:
“நீங்கள் மேட்ச் வின்னராக இல்லாமல் போயிருந்தால் அவேஷ் கான் போன்ற வேறு ஏதாவது இளம் வீரரை தேர்வு குழுவினர் தேர்வு செய்திருப்பார்கள். ஏனெனில் அவர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவேஷ் கான் ஒரு மிகச்சிறந்த திறமையான இளம் வீரர், அவரின் திறமையை உணர்ந்து தேர்வுக்குழுவினர் சரியான முடிவை எடுத்துள்ளார்கள். இனி எப்படி செயல்படுவது என்பது புவனேஸ்வர் கையில்தான் உள்ளது” என இதுபற்றி மேலும் தெரிவித்த மதன்லால் :

இதையும் படிங்க : எதிர்வரும் தொடரில் இந்திய அணிக்கு இவர் நிச்சயம் தண்ணி காட்டுவார் – டேரன் சமி ஓபன்டாக்

புவனேஸ்வர் குமார் ஒரு மேட்ச் வின்னர் என கூறியுள்ளார். அதனால் கடைசியாக அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பில் அவர் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். இல்லையேல் இந்திய அணியில் அவரின் இடம் பறிபோய் விடும் என எச்சரித்துள்ளார். ஏனென்றால் அவரின் இடத்தில் அவேஷ் கான் போன்ற தரமான இளம் வீரர்கள் வந்துவிட்டார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Advertisement