எதிர்வரும் தொடரில் இந்திய அணிக்கு இவர் நிச்சயம் தண்ணி காட்டுவார் – டேரன் சமி ஓபன்டாக்

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளன. அதே போன்று மூன்று டி20 போட்டிகளும் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் முதல் ஒருநாள் போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவிருக்கின்றன. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே உச்சத்தை தொட்டுள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்கு தனது திறமையால் பிரச்சனை கொடுக்கும் ஒரு வீரர் குறித்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டேரன் சமி தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் என்னை பொருத்தவரை பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு பிரச்சினையை கொடுக்கும். அதிலும் குறிப்பாக பொல்லார்டு இந்திய அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

ஏனெனில் இந்திய மைதானங்களில் அவர் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். எனவே இந்தியாவில் உள்ள மைதானங்களில் தன்மை அவருக்கு நன்றாக தெரியும். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுமாராகவே செயல்பட்டாலும் சில புதிய திறமைசாலிகளை கண்டெடுத்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் இந்திய தொடரில் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி அதனை பயன்படுத்தி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

pollard

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய மண்ணில் எப்போதுமே இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணி. அதேபோன்று அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருப்பதனால் இந்திய அணியை வீழ்த்துவது கஷ்டம் என்றாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை அசைத்துப் பார்க்கும் என்று தான் கருதுவதாக கூறியுள்ளார். அதேபோன்று 33 வயதான கீமார் ரோச் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கீமார் ரோச் போன்ற பந்துவீச்சாளர்கள் எப்போதும் புது பந்தில் சிறப்பாக பந்து வீச கூடியவர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 2007 டி20 பைனல்ல நான் லாஸ்ட்டா ஸ்கூப் ஷாட் ஆட இதுவே காரணம் – மனம்திறந்த மிஸ்பா உல் ஹக்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் தொடரை இழந்ததால் நிச்சயம் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த தொடரில் வெற்றி பெற்று மீண்டும் தங்களது வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement