நீங்க என்ன அவ்ளோ பெரியாளா? சீக்கிரமா தண்டனை கொடுங்க – ஹர்மன்ப்ரீத்தை விளாசிய இந்திய ஜாம்பவான், பிசிசிஐக்கு கோரிக்கை

Harmanpreet Kaur
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 வென்றது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற கடைசி போட்டி பரபரப்புக்கு மத்தியில் சமனில் முடிந்தது. குறிப்பாக வங்கதேசம் நிர்ணயித்த 226 ரன்களை துரத்திய இந்தியா 191/4 என்ற நல்ல நிலைமையில் இருந்தும் அதன் பின் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 225 ரன்களுக்கு அவுட்டாகி கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதை விட அந்த போட்டியில் முக்கியமான சமயத்தில் பேட்டிங் செய்வதற்காக வந்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் எல்பிடபள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டதால் ஸ்டம்ப்பை பேட்டால் அடித்து நொறுக்கினார். குறிப்பாக பந்து காலில் படாமல் தன்னுடைய பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தும் அந்தப் போட்டியில் நின்ற வங்கதேசத்தைச் சேர்ந்த உள்ளூர் அம்பயர் அந்த அணிக்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வேண்டுமென்றே தீர்ப்பு வழங்கியதால் உச்சகட்ட கோபமடைந்த அவர் திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார். அத்தோடு நிற்காமல் அடுத்த முறை வங்கதேசத்துக்கு வரும் போது அம்பயர்களுக்கு எதிராக விளையாடுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வெளிப்படையாக விமர்சித்தார்.

- Advertisement -

ஜாம்பவான் விமர்சனம்:
ஆனால் அவை அனைத்தையும் விட 1 – 1 (3) என்ற கணக்கில் தொடர் சமனடைந்ததால் பகிர்ந்து கொடுக்கப்பட்ட கோப்பையை கையில் வாங்கிய அவர் “அம்பயர் இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதால் போட்டோ எடுக்க அவர்களையும் அழைத்து வாருங்கள்” என்று அருகில் நின்ற வங்கதேச கேப்டன் சுல்தானாவை அவமானப்படுத்தும் வகையில் வெளிப்படையாக பேசினார். அதனால் அதிருப்தியடைந்த சுல்தானா எதுவும் பேசாமல் தன்னுடைய அணி வீராங்கனைகளை கூட்டிக்கொண்டு பெவிலியன் திரும்பியது இந்திய ரசிகர்களையே கோபமடையை வைத்தது.

முதலில் நடுவர்கள் தவறான தீர்ப்பு வழங்கினாலும் அதை ஏற்றுக்கொண்டு அமைதியாக செல்வதே விளையாடும் வீரர் வீராங்கனைகளின் கடமை என்பது அந்த காலத்திலிருந்து இருந்து வரும் விதிமுறையாகும். மேலும் ஸ்டம்ப் போன்ற விளையாட்டு உபகரணங்களை சேதப்படுத்துவதும் நடுவரை வெளிப்படையாக விமர்சிப்பதும் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வரலாற்றில் எத்தனையோ முறை 90களில் தவறான தீர்ப்பால் அவுட்டான போதெல்லாம் ஜாம்பவான் சச்சின் அமைதியாக சென்ற நிலையில் ஸ்டீவ் பக்னர் போன்ற நடுவர்கள் வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய போதெல்லாம் கங்குலி போன்ற கேப்டன்கள் இந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் ஹர்மன்ப்ரீத் மட்டும் அவ்வாறு நடந்து கொண்டது இந்திய ரசிகர்களையே அதிருப்தியில் ஆழ்த்தியது. அத்துடன் வங்கதேச வீராங்கனைகளை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியதும் இந்திய ரசிகர்களையே கோபமடைய வைத்தது.

மொத்தத்தில் 3 அடிப்படை விதிமுறை மீறல்களை செய்த ஹர்மன்ப்ரீத்துக்கு ஐசிசி விரைவில் தண்டனை வழங்க இருப்பதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் கிரிக்கெட்டை விட அதில் விளையாடும் வீரர்கள் அல்லது வீராங்கனைகள் எப்போதுமே பெரியவர்கள் கிடையாது என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் மதன் லால் விமர்சித்துள்ளார். மேலும் வங்கதேசத்தினரை அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்துள்ளதாக கோபத்தை வெளிப்படுத்தும் அவர் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : இலங்கையின் 22 வருட சரவெடி சாதனையை உடைத்த இந்தியா – ஆஸியை முந்தி 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் நடத்தை மிகவும் மோசமாக இருந்தது. அவர் ஒன்றும் இந்த விளையாட்டை விட பெரியவர் கிடையாது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக பிசிசிஐ கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement