IND vs WI : இலங்கையின் 22 வருட சரவெடி சாதனையை உடைத்த இந்தியா – ஆஸியை முந்தி 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

IND and Srilanka
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து ட்ரினிடாட் நகரில் ஜூலை 20ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 438 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்த 121 ரன்கள் குவித்தார்.

Kohli wi keeper

- Advertisement -

அவருடன் கேப்டன் ரோஹித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ரவீந்திர ஜடேஜா 61, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 என இதர வீரர்களும் நல்ல ரன்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்து அசத்திய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் ஒரு கட்டத்தில் 208/4 என்ற நல்ல நிலையிலிருந்து 255 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர்

இந்தியாவின் உலக சாதனை:
முன்னதாக இந்த போட்டியில் 3வது நாளில் மழை பெய்த 4வது நாளிலும் மழை வருவதற்கான வாய்ப்பிருந்ததால் 183 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா விரைவில் ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்வதற்காக அதிரடியாக விளையாட துவங்கியது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே தன்னுடைய தரத்திற்கு நிகராக அட்டகாசமாக பேட்டிங் வெளிப்படுத்திய நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக செயல்பட்டார். அந்த வகையில் வெறும் 5.3 ஓவர்களிலேயே 50 ரன்கள் குவித்த இந்த ஜோடி 90 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையும் படைத்தது.

Rohit-and-Jaiswal

அதில் ரோகித் சர்மா அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (43) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களிலேயே ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களது அதிரடியான ஆட்டத்தால் 12.2 ஓவர்களிலேயே இந்தியா 100/0 ரன்களைக் கடந்து 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முதல் 100 ரன்கள் குவித்த அணி என்ற இலங்கையின் 22 வருட சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 13.2 ஓவர்களில் 100/0 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அந்த விரிவான பட்டியல் இதோ:
1. 12.2 ஓவர்கள் : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, ட்ரினிடாட், 2023*
2. 13.2 ஓவர்கள் : இலங்கை – வங்கதேசத்துக்கு எதிராக கொழும்பு, 2001
3. 13.2 ஓவர்கள் : இங்கிலாந்து – தென்னாபிரிக்காவுக்கு எதிராக லண்டன், 1994

Ishan-Kishan-2

2. அதைத்தொடர்ந்து வந்த இஷான் கிசான் அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52* (34) ரன்களும் சுப்மன் கில் 29* (37) ரன்களும் எடுத்ததால் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸை 7.54 என்ற ரன்ரேட்டில் 181/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் (குறைந்த்து 10 ஓவர்கள்) அதிக ரன்ரேட்டில் ரன்களை குவித்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையும் தகர்த்த இந்தியா மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. இந்தியா (181/2 டிக்ளேர்) : 7.54, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2023*
1. ஆஸ்திரேலியா (241/2 டிக்ளேர்) : 7.53, பாகிஸ்தானுக்கு எதிராக, 2017

- Advertisement -

3. அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையும் படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 90 – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2023*
2. இங்கிலாந்து : 80, பாகிஸ்தானுக்கு எதிராக, 2022
3. வெஸ்ட் இண்டீஸ் : 78, நியூசிலாந்துக்கு எதிராக, 2014

Jaiswal-and-Rohit

இதையும் படிங்க:IND vs WI : அரைசதம் அடிக்க பயன்படுத்திய இந்த பேட் யாருடையது தெரியுமா? – போட்டிக்கு பின் நன்றி தெரிவித்த இஷான் கிஷன்

இறுதியில் 365 ரன்களை துரத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரத்வெய்ட் 28, மெக்கன்சி 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் சுழலில் சொற்ப ரன்களில் சிக்கினர். அதனால் 4வது நாள் முடிவில் 76/2 என தடுமாறி வரும் அந்த அணிக்கு களத்தில் தக்நரேன் சந்தர்பால் 24*, ப்ளாக்வுட் 20* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement