IND vs WI : அரைசதம் அடிக்க பயன்படுத்திய இந்த பேட் யாருடையது தெரியுமா? – போட்டிக்கு பின் நன்றி தெரிவித்த இஷான் கிஷன்

Ishan-Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது டிரினிடாட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று 289 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே வேளையில் எஞ்சியுள்ள 8 விக்கெட்டுகளை கைப்பற்றும் நிலையில் இந்திய அணி வெற்றி பெறும் என்பதனால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.

Ishan-Kishan-1

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்சில் 255 ரன்களிள் ஆட்டமிழந்த வேளையில் 183 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்ததும் நான்காவது வீரராக களமிறங்கி 34 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது அரை சதத்தையும் பதிவு செய்தார். மேலும் இந்த இரண்டாவது இன்னிங்சில் இஷான் கிஷன் 30 ரன்கள் கடந்த போது தனது பேட்டை மாற்றினார்.

Ishan-Kishan-2

அதனைத்தொடர்ந்து அவர் அரைசதம் அடித்தபோது பயன்படுத்தியது ரிஷப் பண்டின் பேட் என்பது தற்போது தெரியவந்துள்ளது. “RP 17” என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த ரிஷப் பண்டின் பேட்டை வைத்தே இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். அதோடு ஒற்றைக் கையால் ரிஷப் பண்டினை போன்றே ஒரு சிக்சரை அடித்து அவர் அந்த அரைசதத்தையும் பூர்த்தி செய்திருந்தார். அதோடு நேற்றைய போட்டி முடிந்து ரிஷப் பண்ட் குறித்து பேசியிருந்த இஷான் கிஷன் கூறுகையில் :

- Advertisement -

நான் வெஸ்ட் இண்டீஸ் வருவதற்கு முன்னதாக பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில நாட்கள் தங்கி அங்கு பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரும் (ரிஷப் பண்ட்) அங்கு தனது காயத்திற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது என்னை சந்தித்த அவர் என்னுடைய பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவருடைய அறிவுரைகள் இந்த போட்டியில் எனக்கு பயன்பட்டன.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி அஷ்வின் படைத்த – மாபெரும் சாதனை

அவரது அறிவுரைகள் என்னுடைய பேட்டிங்கிற்கு பெரிய அளவில் உதவின. ரிஷப் பண்டினை எனக்கு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் இருந்து நீண்ட காலமாக தெரியும். அவருடன் இருந்தது மற்றும் அவருடன் உரையாடியது என அனைத்துமே எனக்கு இந்த டெஸ்ட் போட்டியில் உதவின என இஷான் கிஷன் ரிஷப் பண்டிற்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement