சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி அஷ்வின் படைத்த – மாபெரும் சாதனை

Ashwin-and-Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் தற்போது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதால் இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

IND vs WI Rohit Sharma

- Advertisement -

அந்த வகையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 365 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

எஞ்சியுள்ள இன்றைய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இன்னும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே வேளையில் மேலும் 289 ரன்கள் தேவை என்கிற நிலையுடன் களமிறங்க காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும், தற்போது இரண்டாவது இன்னிங்சில் இதுவரை இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Ashwin 2

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியதோடு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக அணில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் 711 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி கபில் தேவை நெருங்கி – அஷ்வின் படைத்த சாதனை

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 712 விக்கெட்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர்களை தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் கபில் தேவ் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement