IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி கபில் தேவை நெருங்கி – அஷ்வின் படைத்த சாதனை

Ashwin
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ற என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிதந்திருந்தனர்.

Ashwin 2

- Advertisement -

அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அஸ்வின் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்துகளை வீழ்த்தி அசத்தினார்.

அதனை தொடர்ந்து தற்போது ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்சில் இதுவரை 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Ashwin-1

இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்திய அணி சார்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக கபில்தேவ் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்ததாக அணில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : என்னய்யா பித்தலாட்டமா இருக்கு? தோத்தாலும் மீசையை முறுக்கி பாக், வங்கதேசத்தை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

இதனால் இரண்டாவது இடத்தில் இருந்த அணில் கும்ப்ளேவை மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளியுள்ளார். அஸ்வின் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாட இருக்கும் வேளையில் கபில் தேவின் சாதனையை தகர்க்கவும் அவருக்கு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement