ஆசிய கோப்பை 2023 : சுமாரான கேஎல் ராகுல் விளையாடியே ஆகணும்னு கட்டாயமா? அவர ஏன் செலக்ட் பண்ணல – மதன் லால் விமர்சனம

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையிலும் இறுதிக்கட்ட வீரர்களை தேர்ந்தெடுக்கவும் உதவும் இத்தொடரில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த அணியில் இளம் வீரர் திலக் வர்மா நேரடியாக தேர்வாகியுள்ள நிலையில் ஒருநாள் போட்டிகளில் சுமாராக செயல்படும் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சஞ்சு சாம்சன் கண்துடைப்புக்காக பேக்-அப் வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Asia-Cup

- Advertisement -

அதே போல முதன்மை மணிக்கட்டு ஸ்பின்னரான சஹால் ஆச்சரியப்படும் வகையில் கழற்றி விடப்பட்டுள்ளார். எது எப்படியிருந்தாலும் இந்த அணியில் 4வது பேட்டிங் இடத்தில் நிலவும் பிரச்சனையை தீர்க்க ஸ்ரேயாஸ் ஐயரும் விக்கெட் கீப்பர் பிரச்சனையை போக்க கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கும் முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த அறிவிப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் முழுவதுமாக குணமடைந்து விட்டார் என்று தெரிவித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் புதிதாக லேசான காயத்தை சந்தித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

விளையாடனும்னு அவசியமா:
இருப்பினும் இன்னும் ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவித்த அகர்கர் உலக கோப்பைக்குள் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று நம்புவதாக கூறினார். அத்துடன் ஒருவேளை ஆசிய கோப்பையில் ராகுல் குணமடையாமல் போகும் பட்சத்தில் நிலைமையை சமாளிப்பதற்காகவே சஞ்சு சாம்சன் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

KL rahul Shreyas Iyer

இந்நிலையில் ஏற்கனவே சுமாரான ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்ததும் எவ்விதமான முதன்மை போட்டிகளில் விளையாடாமல் வெறும் பயிற்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நேரடியாக உலகக் கோப்பையில் களமிறங்கியாக வேண்டும் என்ற அவசியம் எதுவும் இருக்கிறதா? என முன்னாள் வீரர் மதன் லால் விமர்சித்துள்ளார். அதே போல சஹால் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பட்டியல் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுல் முழுமையாக ஃபிட்டாகி விட்டாரா என்பது அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவினருக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக புதிதாக அவர் சந்தித்துள்ள காயத்தின் நிலை என்ன? என்பதை பற்றி அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்பதற்கான உறுதித்தன்மையும் காட்டப்படவில்லை. அந்த இருவருமே இதுவரை எவ்விதமான கிரிக்கெட்டிலும் விளையாடாமல் இருக்கின்றனர்”

Madan Lal INDIA

“என்னை கேட்டால் அவர்கள் முழுமையாக குணமடைந்து முதன்மையான போட்டிகளில் விளையாடி தங்களுடைய ஃபிட்னஸ் பற்றி நிரூபித்த பின்பே தேர்வு செய்ய பட்டிருக்க வேண்டும். ஏனெனில் வலைப்பயிற்சியில் விளையாடுவதற்கும் முதன்மையான போட்டியில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேலும் தற்போதைய நிலைமையில் ராகுல் மோசமான காயத்தை சந்தித்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் உலகக் கோப்பைக்கு முன் வலைப்பயிற்சியைத் தாண்டி முதன்மையான போட்டிகளில் விளையாட வேண்டும்”

- Advertisement -

“அதே போல சஹால் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக அவர்கள் ஒரு மணிக்கட்டு ஸ்பின்னர் மட்டும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் விக்கெட் எடுக்கும் திறமையும் மேட்ச் வின்னராக செயல்படும் தன்மையும் கொண்ட சஹால் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாகும். அக்சர் படேல் கடந்த சில வருடங்களாக சிறப்பாக செயல்படுகிறார் என்பதை ஒப்புக் கொள்கிறேன்”

Yuzvendra-Chahal-1

இதையும் படிங்க:இவரை மாதிரி ஒருத்தரை தான் எதிர்பார்த்தோம். ரிங்கு சிங்கை கொண்டாடும் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

“அதை நான் விமர்சிக்கவும் இல்லை. ஆனால் அவர் செய்யும் வேலையை செய்வதற்கு நம்மிடம் ஏற்கனவே ரவிந்திர ஜடேஜா இருக்கிறார். எனவே நீங்கள் போட்டிகளை வெல்வதற்கு சஹால் போன்ற மேட்ச் வின்னர்கள் தேவை. எனவே சஹால் கழற்றி விடப்பட்டுள்ளதும் ராகுல் போன்ற முழுமையாக ஃபிட்டாகாத வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் இந்த அணியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்” என்று கூறினார்.

Advertisement