இவரை மாதிரி ஒருத்தரை தான் எதிர்பார்த்தோம். ரிங்கு சிங்கை கொண்டாடும் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

Rinku-Singh
- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ரிங்கு சிங் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

Rinku-Singh

- Advertisement -

ஏனெனில் பின்வரிசையில் களமிறங்கிய அவர் 21 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் என 38 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு அந்த போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது போட்டியில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பே மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ரிங்கு சிங் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவினை பெற்றுள்ளார். ஏனெனில் 15 பந்துகள் வரை சந்தித்த ரிங்கு சிங் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

Rinku-Singh-1

ஆனால் அதன்பிறகு கடைசி இரண்டு ஓவர்களை டார்கெட் செய்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். இறுதியில் 21 பந்துகளை சந்தித்த அவர் 38 ரன்கள் குவித்து எப்படி இறுதி ஓவர்களை கையாள்வது என்பதை காண்பித்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தற்போது தான் ஒரு பிராப்பரான டி20 ஃபினிஷர் இந்திய அணிக்கு கிடைத்துள்ளார் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இவரை போன்ற ஒரு சரியான ஃபினிஷர் தான் அந்த இடத்தில் விளையாட வேண்டும் என்றும் அவரது ஆட்டத்தில் எந்தவித பதட்டமும் இல்லாமல் தெளிவாக இருப்பதால் இவரை போன்ற ஒரு வீரரை தான் எதிர்பார்த்தோம் என ரசிகர்கள் பலரும் ரிங்கு சிங்கிற்கு ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : அதுல கோட்டை விட்டாங்க, சஞ்சு சாம்சன் – சஹால் கழற்றி விடப்பட்ட காரணம் பற்றி கவாஸ்கர் பேட்டி

அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் : கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி மிகச் சிறப்பாக ஃபினிஷிங் செய்திருக்கிறது. ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது என்று அவர் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement