ஆசிய கோப்பை 2023 : அதுல கோட்டை விட்டாங்க, சஞ்சு சாம்சன் – சஹால் கழற்றி விடப்பட்ட காரணம் பற்றி கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar 2
- Advertisement -

பாகிஸ்தானில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை 2023 தொடருக்காக ஆசிய கண்டத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா தங்களுடைய 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. 2023 உலகக்கோப்பை விளையாடப்போகும் இறுதிக்கட்ட வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக நடைபெறும் இத்தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதற்காக மீண்டும் நேரடியாகவே தேர்வாகியுள்ளதும் சஞ்சு சாம்சன் வெறும் பேக்-அப் வீரராக கண்துடைப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் காலம் காலமாக தொடர் வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் 390 ரன்களை 55.71 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார்.

கவாஸ்கர் ஏமாற்றம்:
மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் அடித்த நொறுக்கும் சூரியகுமார் சற்று மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் 544 ரன்களை 24.32 என்ற மோசமான சராசரிலேயே எடுத்துள்ளார். அதே போலவே ஒருநாள் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகாத திலக் வர்மா இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நேரடியாக ஆசிய கோப்பையில் தேர்வாகியுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் வெறும் கூல்ட்ரிங்ஸ் தூக்குவதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Kuldeep-Yadav-Chahal

அது போக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கடந்த 5 வருடங்களாக முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டு வரும் யுஸ்வேந்திர சஹால் கடந்த டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் இம்முறை தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை கழற்றி விடப்பட்டு நல்ல ஃபார்மில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளில் அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு தடுமாறும் சஞ்சு சாம்சன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்டதே இந்த ஆசிய கோப்பையில் இடம் கிடைக்காததற்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதே போல சஹாலை விட குல்தீப் யாதவ் பவுலிங்கை தாண்டி பேட்டிங்கில் கணிசமான ரன்களை அடிக்கும் திறமை கொண்டிருப்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சமீபத்திய தொடர்பில் சஞ்சு சாம்சன் சற்று அதிக ரன்கள் அடித்திருந்தால் நிச்சயமாக இந்த அணியில் இன்றியமையாதவராக இருந்திருப்பார். சஹால் தேர்விலும் அதே நிலைமை தான். இருப்பினும் சில நேரங்களில் தேர்வுக்குழுவினர் அணியின் சமநிலைமையை பார்க்கிறார்கள். அது போக சில தருணங்களில் அந்தக் குறிப்பிட்ட வீரர்கள் ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக அணிக்கு உதவ முடியுமா என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்”

Gavaskar

“அதன் அடிப்படையில் பார்க்கும் போது லோயர் ஆர்டரில் சஹாலை விட குல்தீப் யாதவ் சற்று சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதே போலவே சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்தாலும் ஆல் ரவுண்டர்களை அணி நிர்வாகம் பார்க்கின்றனர். இருப்பினும் தற்போது 29 வயது மட்டுமே நிரம்பியுள்ள சஞ்சு சாம்சனுக்கு இது உலகக் கோப்பையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் இந்திய அணியில் நிலையான இடம் பிடிப்பதற்கு இன்னும் தேவையான காலங்கள் இருக்கின்றன. எனவே தற்சமயத்தில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி சிறப்பாக இருக்கிறதாகவே நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : எல்லாம் ஓகே ஆனா தாக்கூருக்கு பதிலா அந்த சிஎஸ்கே ஆல் ரவுண்டர சேத்துருக்கலாம் – கம்பீர் வித்தியாச கருத்து

அவர் கூறுவது போல வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் 1 அரை சதம் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்ட நிலையில் இஷான் கிசான் ஹாட்ரிக் அரை சதமடித்தார். அதே போல திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் டி20 தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அதே போல சாஹலுக்கு பேட்டை ஒழுங்காக கையில் பிடிக்க தெரியாது என்ற நிலையில் குல்தீப் கணிசமான ரன்களை அடிக்கும் திறமை கொண்டிருப்பதால் முன்னுரிமை பெற்று தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement