இந்திய அணிக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச பாகிஸ்தான் தான் காரணம் – ஆட்டநாயகன் லுங்கி நிகிடி பேட்டி

Lungi-Ngidi
- Advertisement -

பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற முக்கியமான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமாக காரணமாக பார்க்கப்படுவது முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி குறைவான ரன்களை அடித்ததும், அடுத்ததாக பீல்டிங்கின் போது ஏகப்பட்ட தவறுகளை செய்ததும் தான்.

KL Rahul Lungi Nigidi

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது. இப்படி இந்திய அணியின் குறைவான ரன் குவிப்பிற்கு காரணமாக தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியின் போது நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித்தையும், அதே ஓவரின் கடைசி பந்தியில் ராகுலையும் அவர் வீழ்த்தினார்.

இப்படி ஒரே ஓவரில் இரண்டு துவக்க வீரர்களையும் ஆட்டம் இழக்க செய்த அவர் ஏழாவது ஓவரின் போது விராட் கோலியையும் சாய்த்தார். இப்படி இந்திய அணியின் மும்மூர்த்திகளையும் காலி செய்ததால் அங்கேயே இந்திய அணியின் தடுமாற்றம் துவங்கியது. இருந்தாலும் சூரியகுமார் ஒரு பக்கம் நிலைத்து விளையாடிய வர பின் வரிசையில் அதிரடிக்காட்டும் ஹார்டிக் பாண்டியாவையும் வந்த வேகத்திலேயே லுங்கி நெகிடி ஆட்டம் இழக்க செய்து வெளியேற்றினார். இப்படி இந்திய அணியின் முக்கிய நான்கு வீரர்களையும் அவர் வீழ்த்தியதே இந்திய அணியின் ரன் குவிப்பு சரிந்ததற்கு காரணம் என்று கூறலாம்.

Lungi Ngidi

இந்த போட்டியில் முழுவதுமாக 4 ஓவர்கள் வீசிய அவர் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லுங்கி நெகிடிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. பின்னர் இந்திய அணிக்கு எதிரான இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய லுங்கி நெகிடி கூறுகையில் : இது போன்ற க்ளோஸ் மேட்ச்கள் எங்களுக்கு பரபரப்பான தருணமாக மாறிவிடுகிறது. ஏனெனில் பவுலராக நாங்கள் களத்திற்கு சென்று பேட்டிங்கில் பெரிய அளவில் கை கொடுக்க முடியாது. எனவே அணியில் உள்ள பேட்டர்களை நம்பி தான் ஆக வேண்டும். அந்த வகையில் கடைசி வரை பதற்றத்துடன் அமர்ந்திருந்தோம்.

- Advertisement -

இதுபோன்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா போன்ற பெரிய அணியை வீழ்த்த நான் எனது பங்களிப்பை அளித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அதே போன்று எனது நாட்டிற்காக இவ்வளவு பெரிய போட்டியில் என்னுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கி ஆட்டநாயகன் விருதினை பெறுவது என்னுடைய மிகப்பெரிய கனவு. அந்த வகையில் இந்த போட்டியை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இதையும் படிங்க : IND vs RSA : இந்திய அணி செய்த அந்த தவறுகள் தான் நாங்க ஜெயிக்க காரணம் – தெம்பா பாவுமா ஓபன்டாக்

இந்த போட்டியில் நான் இப்படி மிகச் சிறப்பாக பந்து வீச காரணமே பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் தான். ஏனெனில் இதே மைதானத்தில் கடைசியாக பாகிஸ்தான அணியும் விளையாடியிருந்தது. அவர்கள் எவ்வாறு எந்த லைனில் பந்து வீசினார்களோ அதை கணித்து இந்த மைதானத்தில் தன்மையை அறிந்து கொண்டேன். அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக அவர்களின் திட்டத்தையே நான் பயன்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றினேன் என லுங்கி நெகிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement